Pages

Monday, July 5, 2010

SYMA AND MAINTENANCE OF TEMPLE TANK

நமது சைமாவினரால் அல்லிக்கேணி திருக்குளம் பராமரிக்கப்படுவது தெரிந்ததே ! 


முந்தைய பதிவில் திருக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி மொத்தமாக சுத்தம் செய்தது பற்றி எழுதியிருந்தேன். திருக்குளத்தை நன்கு சுத்தப் படுத்தியபின் மழை நீரால் குளம் நன்கு நிரம்பி உள்ளது.


"புறன் தூய்மை நீரான் அமையும்" என்பது வள்ளுவர் வாக்கு. இந்த நீரும் கால போக்கில் அசுத்தம் ஆகிவிடும் ; தவிர குளத்து நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு விளைவிக்க நேரிடலாம். எனவே, தண்ணீரை இயற்கையாக சுத்தம் செய்ய , மீன்கள் அவசியம் .


நமது உறுப்பினர்களின் முயற்சியால் சுமார் 5000 கெண்டை மீன் குஞ்சுகள் பூண்டியிலிருந்து வாங்கி வரப்பட்டு திருக்குளத்தினுள் விடப்பட்டன.

1 comment:

  1. good news. my daughters were disappointed to see few fish in the tank. now they will make it a routine to feed the fish. - kannan

    ReplyDelete