Pages

Wednesday, June 8, 2011

Article in Dinamalar of date [8th June 2011] 0n the woes of Triplicane.

Thiruvallikkeni (Triplicane) suffers from civic woes.  The narrow roads and bylanes are blocked by vehicles parked haphazardly – remaining there all through.  There is little of walking space.  There is the peculiar problem of stray cattle – those horned creatures menacingly moving and sometimes attacking people.  Aged persons and children alike suffer and are under constant fear of sharing the limited space on road with the cattle.  The cattle problem is acute especially in the market area near Gangaigondan Mandapam.

Garbage remains uncleaned on the street – both the authorities and people are to blame.  There are some who throw garbage from their housetops; the plastic bins are many a times knocked over by cattle and they scatter whatever was put inside.  The present agency handling garbage cleaning is not upto the mark and cleanliness suffers. 

Some good individuals and Social organizations have been taking up with Civic authorities and the response has been lukewarm. 

Today’s Dinamalar has an article on the woes of Triplicane.  Thanks to the newspaper ‘Dinamalar’ for bringing this to light – we hope that authorities do take immediate action.

Regards – S. Sampathkumar

You can read the Dinamalar article  here : --Dinamalar

புகழ் பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் சுற்று வட்டாரப் பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிப்பதால், பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். திருவல்லிக்கேணியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கோவில் குளம் அனைத்தும் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிப்பதால், பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கோவிலின் மதில் சுவரையொட்டி உள்ள பகுதிகள் அனைத்தையும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு அவர்களுடைய வாகனங்களை நிறுத்தி வைப்பதால், மதில் சுவரையொட்டி உள்ள பூங்காவை பராமரிக்க முடியவில்லை. அதனால், பல்லாயிரக்கணக்கில் செலவழித்து, வாங்கி நட்ட செடிகள் அழிந்து வருகின்றன. வாகனங்கள் பூங்காவை மறைத்திருப்பதால், இங்கு சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இதனால், கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். சில நேரம் மாடுகளையும் இங்கு கட்டி விட்டுச் செல்கின்றனர். அவற்றால், பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து கோவிலின் சுற்றுப்பகுதியில் குடியிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் கூறியதாவது: கோவிலை சுற்றி தேவையில்லாத இடங்களில், மாநகராட்சி குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குப்பைகளை கொட்டி விட்டுச் செல்கின்றனர். அது மட்டுமின்றி தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் கோவிலின் முன் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். தேர் நிறுத்தி வைத்துள்ள இடத்தில் சமூக விரோதிகள் மது அருந்தி, பல்வேறு சமூக விரோத செயல் களில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது தொடர்பாக கேள்வி கேட்டால், குண்டர்களை வைத்து மிரட்டுகின்றனர். கோவில் நிலத்தில் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வருகின்றன. கோவில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, குளத்தை நாசப்படுத்துகின்றனர். இது பற்றி பலமுறை போலீசாரிடமும், மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தும் பலன் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். இது பற்றி, பார்த்தசாரதி கோவில் கண்காணிப்பாளர் கூறும்போது, "இது காலம் காலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் புகார் செய்கின்ற போது, ஓரிரு நாள் நடவடிக்கை இருக்கும். அதன் பிறகு அதை பற்றி போலீசார் கண்டு கொள்ள மாட்டார்கள். "உற்சவ காலத்தில் மட்டும் காட்டும் அக்கறையை எப்போதும் காட்டினால் பார்த்தசாரதி கோவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீளும்' என்றார்.

No comments:

Post a Comment