Pages

Wednesday, November 6, 2013

Triplicane Post Office woes.... reports Junior Vikatan

I had earlier  posted on the endless wait of Triplicanites for the functioning of Sri Parthasarathi Post Office. It is not merely a Post Office that we have been yearning for ~ it is not simply a building or an Office – but something unique in the name of the presiding deity of Thiruvallikkeni ………… One need not belong to the generation which used post cards / inland letters / covers / telegrams / Greeting cards / money orders / postal orders and the like… for communicating… one may not have waited for the post man to come and deliver the message that you wanted to receive… The post man was once the most respected and known person in any village as people waited for his arrival expectantly everyday.

Simply there are  hundreds of post offices by various names – of the locality where they are situate, but to those residents of Triplicane – the building that housed Thiruvallikkeni Thapal Nilayam is a monument and many would have green stories kindling nostalgia.….the one that functioned at Big Street, Triplicane was known as ‘Sri Parthasarathi Koil Post Office’  ….. only one of its genre named not after the locality but after our presiding deity Sri Parthasarathi. 

People of Triplicane, including pensioners and others have been representing for revival of Sri Parthasarathi Swami Post Office and there have been various reports  that the building in Car Street, newly built as staff quarters for Thirukoil staff was to have a Nationalised Bank in its first floor and the Post Office from the ground floor.  There was also news that the Post Office was opened by the Hon’ble Chief Minister through video conferencing.   Many representations have been made by the recipients and there has been news every now and then that it is pending with one Dept or the other. 

There have been newsitems on this in The Hindu, Times of India, Dinamalar, Dinakaran and more……..  there are reports asking why a building which was allotted months back, still is not functioning .!!  Today’s Junior Vikatan has a detailed report on this… and cites that ‘rent advance’ is one major impediment ; the HR&CE official has promised that it will be sorted out soon……

In microeconomic theory, there is the concept of ‘opportunity cost’ - the value of the best alternative forgone, in a situation in which a choice needs to be made between several mutually exclusive alternatives given limited resources. Assuming the best choice is made, it is the "cost" incurred by not enjoying the benefit that would be had by taking the second best choice available.  If only somebody had taken the decision to have the building rented out rather than keeping it idle for years, it for sure would have earned much more rental income and investment yield of interest from that income…………..  here is the JV report reproduced in its entirety :

  
விரட்டும் அறநிலையத் துறை.. தடுமாறும் தபால் துறை!


'முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட தபால் நிலையக் கட்டடத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படவிடாமல் தடுக்கின்றனர்’ என்ற வித்தியாசமான புகார் முதல்வரின் தனிப் பிரிவுக்கு வந்திருக்கிறது! புகார்  கொடுத்த திருவல்லிக்கேணி பகுதி மக்களைச் சந்தித்தோம். அங்கு செயல்படும் சைமா என்ற அமைப்பின் சார்பில் ரெங்கராஜன் என்பவர் விரிவாகப் பேசினார். ''திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தபால் நிலையம் நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்ட பெருமை உடையது. இது, பிரிட்டிஷ் காலத் தில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது தபால் நிலையம். இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த குடி மக்கள் 2,000-க்கும் அதிகமானோர் இங்கு கணக்கு வைத்திருக்கிறார்கள்.


தபால் நிலையக் கட்டடம் இடியும் நிலையில் இருப்பதாகக் கூறி, வேறு இடத்துக்கு மாற்றினர். பிறகு, அந்தக் கட்டடமும் சரியில்லை என்று தபால் துறை இந்த அலுவலகத்தை மூடிவிட்டது. எங்கள் பகுதியைச் சேர்ந்த மக்கள், இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள பெரிய தபால் நிலையத்தில் தனிவரிசை ஒதுக்கி தபால் துறை உத்தரவிட்டது. ஆனால், அது இங்கு இருந்து தூரத்தில் இருப்பதால் இங்கு உள்ளவர்கள் கடும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தபால் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கக்கோரி அறநிலையத் துறைக்கு பல முறை கோரிக்கை மனுக்கள் அனுப்பினோம். அதன்படி நாச்சியார் அம்மாள் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வணிக நோக்குக்காகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தைத் தபால் அலுவலகத்துக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஆனால், பல மாதங்கள் கடந்தும் தபால் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இதுபற்றி தபால் துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய கட்டடத்தில் தபால் நிலையம் இயங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். அந்தக் கட்டடத்துக்கு மாத வாட கையாக 16 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கும் சம்மதித்தனர். ஆனால், இப்போது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கட்டடத்தைத் தராமல் இழுத்தடிக்கின்றனர். அதுபற்றி கேட் டால், வாடகை மட்டும் போதாது, பத்து மாத அட்வான்ஸ் தொகையும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஒரு மாத அட்வான்ஸ் கொடுப்பதற்குக் கூட மத்திய அரசு விதிமுறையில் இடம் இல்லை என்று தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படியே பிரச்னை நீடிப்பதால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பத்து மாத அட்வான்ஸ் தொகையை நாமே கட்டிவிடுவோம் என்று முடிவெடுத்து அதை இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் கண்ணனிடம் தெரிவித்தோம். ஆனால், அவர், தபால் துறைதான் செலுத்த வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். பார்த்தசாரதி கோயில் தபால் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தைத் தனியாருக்குக் கூடுதல் வாடகைக்குவிடுவதுதான் அவர்களுடைய நோக்கமாக உள்ளது'' என்றார்.

இதுபற்றி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபாலிடம் பேசினோம். ''எங்கள் விதிமுறைப்படி நாங்கள் பத்து மாத அட்வான்ஸ் தொகை கேட்கிறோம். தபால் துறை சார்பில் அவர்கள் விதிமுறைப்படி அட்வான்ஸ் கொடுக்க முடியாது என்கிறார்கள். மக்கள் நாங்கள் கொடுக்கிறோம் என் கிறார்கள். அது விதிமுறை மீறல். அதை ஏற்றுக்கொண்டால் பின்னர் நிறைய சட்டப் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. விரைவில் இந்தப் பிரச்னையை தபால் துறையுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

விரைவில் என்பதற்கு என்ன அர்த்தம்?
- ஜோ.ஸ்டாலின்  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89068

Many thanks to Junior Vikatan and Jo Stalin for this…

No comments:

Post a Comment