Search This Blog

Saturday, July 1, 2017

tragic tale of brother of TM Soundararajan !!

  
He sang in MGR starrer ‘Manthiri directed by Ellis R. Dungan and released in 1950.  Shortly after directing this film, Dungan left the Tamil film industry and did not direct Tamil films again.  TMS for the first time sang for MGR, though his career had begun earlier in 1946 with Krishnavijayam , which was released in 1950 in which he sang five songs, including the hit ‘Raadhey Ennai vittu odathedi…’ After that there was no looking back. He went on to sing more than 11,000 film songs in Tamil alone, apart from several other languages.

TMS (Thoguluva Meenatchi Iyengar Soundararajan) was a person of the bygone era whence the stress was on pronunciation, language and voice.  He lent his voice to actors and thespians in the South Indian film industry such as MGR, Sivaji, NTR, Gemini, SSR, Jaisankar, Muthuraman, Nagesh, Sivakumar, Rajkumar and A Nageswara Rao. He also sang for Kamal, Rajni, Vijaykanth, Prabhu, MN Nambiar, RS Manohar and more. Known for his rendering of devotional songs, he  has also given classical concerts since 1945.  He sang in  11 languages. He was the music director for the film Bala Parikshai.  He passed away in May 2013 @ 91. 

TMS starred as an actor in a few Tamil films -  Pattinathar, Arunagirinathar, Kallum Kaniyagum and Kaviraja Kalamegam. He produced the movie Kallum Kaniyagum with singer A. L. Raghavan. TMS appeared in guest roles in some movies too.

             In 2010, he sang "PirappOkkum ella Uyirkkum’  in the Tamil Semmozhi Meet Anthem, composed by A. R. Rahman.  He worked with more than 50 music Directors, though not much with maestro Illayaraja.  His voice in Annai Oru Aalayam – ‘amma nee sumantha pillai’ for Rajni still resonates.  It was his voice that captured us in Nan Vazhavaippen – ‘enthan ponn vanname’. This is no post eulogizing his greatness – but a sad article read in The Hindu- Tamil – on the plight of his brother TM Krishnamurthi who is in chill penury in Madurai.  The article is reproduced below :
சோதிச்சதெல்லாம் போதும் பெருமாளே..!-  
வதைக்கும் வறுமையில் டி.எம்.எஸ்-ஸின் தம்பி

வசியக் குரலோன் டி.எம்.சௌந்தரராஜனின் பக்திப்பாடல்கள் என்றால், அவரது தம்பி டி.எம்.கிருஷ்ணமூர்த்திக்கு உயிர். ஆனால் இப்போது, அதையெல்லாம் சிலாகித்துக் கேட்கும் மனநிலையில் இல்லை கிருஷ்ணமூர்த்தி - காரணம் வதைத்தெடுக்கும் வறுமை!


மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்த செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த ‘தொகுளுவா’ மீனாட்சி அய்யங்கார் - வேங்கடம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள். மூத்தவர் சீனிவாச அய்யங்கார், அடுத்தது டி.எம்.சௌந்தரராஜன் அய்யங்கார், கடைக்குட்டி டி.எம்.கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார். அண்ணன் சௌந்தரராஜனுக்கு நாவில் சரஸ்வதி என்றால், தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு விரல்களில் கலைவாணி. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.தியாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன், நாதஸ்வர சகோதரர்களான என்.பி.என்.சேதுராமன் - பொன்னுச்சாமி ஆகியோருக்குப் பக்கவாத்தியமாக தவில் வாசித்தவர் கிருஷ்ணமூர்த்தி.

முன்பு, மதுரை வானொலியில் நிலையக் கலைஞராகப் பணியாற்றிய போதே கோயில்களுக்கு வாசிப்பதில்தான் இவருக்குப் பிரியம். 2009-ல் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கிற்கு தவில் வாசித்த முக்கியமான கலைஞர்களில் இவரும் ஒருவர். 2003-ல் இவருக்கு கலை மாமணி விருது கொடுத்து கவுரவித்தது தமிழக அரசு.

மூத்த அண்ணனைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தரராஜனும் 2013-ல் இறந்துவிட, ‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் விடுதலை தரமாட்டேங்கிற..?’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் 92 வயதாகும் டி.எம்.கிருஷ்ணமூர்த்தி. மதுரை யானைமலை நரசிங்கத்தில் சிதிலமடைந்த ஒரு ஓட்டு வீடு. சுண்ணாம்புகூட அடிக்கப்படாத இந்த வீட்டில் தான் 20 ஆண்டு களாக இவர் குடியிருக்கிறார்.

அந்த வீட்டிற்கு கழிவறையோ, குடிநீர் இணைப்போ கிடையாது. சமையல் அறை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம் என்பதால், பிரதான அறையைத்தான் சமைப்பது முதல் சகலத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, ஒரு கியாஸ் அடுப்பு, பழைய மின்விசிறி, இரும்புக்கட்டில், இற்றுப்போன பீரோ, துணி மூட்டைகள், கொஞ்சம் பாத்திரங்கள் இவைதான் இப்போது கிருஷ்ணமூர்த்தியின் மொத்தக் கையிருப்பு.

ஒல்லியான தேகம், நெற்றியில் பளிச்சிடும் நாமம், வெள்ளியாய் நரைத்துப்போன தலையில் ஒரு குடுமி. 92 வயதிலும் கிருஷ்ணமூர்த்தியின் குரல் கணீரென்கிறது. பார்வையும் மோசமில்லை. கூன் விழுந்திருந்தாலும் வேகமாக நடக்கிறார். ஆனால், காது அவ்வளவாய் கேட்கவில்லை.

சோதனை போதும் பெருமாளே :  “தம்பி, 80 வயசு வரைக்கும் வருமானத்துக்குப் பிரச்சினையில்ல. கோயில் நிகழ்ச்சி, வாய்ப்பாட்டு, மிருதங்கம் கத்துக்குடுக்கிறதுன்னு பிழைப்பு ஓடிச்சி. அப்புறம் முடியல. கொஞ்ச நேரம் வாசிச்சாலே மூச்சு வாங்குது. வீட்டுக்காரம்மாவுக்கு மூட்டுவலி. அவங்களால எந்த வேலையும் பார்க்க முடியாது. கடைக்குப் போறதுல இருந்து, கிணத்துல தண்ணி இரைக்கிறது வரைக்கும் எல்லாத்தையும் நான்தான் பார்க்கணும்.

எங்களுக்கு 2 பையனும், ஒரு பொண்ணும் இருக்காங்க. அவங்களே தனிக் குடித்தனத்துல கஷ்டப்படுறதால எங்களைக் கண்டுக்கிடுறதில்லை.  ‘சோதிச்சதெல்லாம் போதும் பெருமாளே, என்னை அழைச்சிட்டுப் போயிடு'ன்னு தினமும் சேவிக்கிறேன், அந்தப் பெருமாள் மனம் இறங்க மாட்டேங்குறானே’’ என்றபோது கிருஷ்ண மூர்த்திக்கு கண்ணீர் திரண்டு உருண்டது.
திடீர்னு எப்படி இவ்வளவு வறுமை? என்று கேட்டோம். ‘‘திடீர் வறுமை எல்லாம் இல்ல. ஆரம்பத்துல இருந்தே பெரிய வசதியெல்லாம் கெடையாது. அப்பா மீனாட்சி அய்யங்கார், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அர்ச்சகராக வேலை பார்த்தாரு. நாங்களும் அவரோட சேர்ந்து கோயில் கைங்கர்யம் பண்ணினோம். அண்ணன் சௌந்தரராஜன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் இசையும், நான் சி.எஸ்.முருகபூபதிக்கிட்ட மிருதங்கமும் கத்துக்கிட்டோம்.

எங்களுக்கு கோயில் நிகழ்ச்சிகள்ல பஜனை பாடுறதுதான் தொழில். வெற்றிலை, பாக்கு, பழத்தோட அஞ்சு பத்து கொடுப்பாங்க. அதை வெச்சித்தான் குடும்பப் பிழைப்பு ஓடிச்சி. நண்பர்கள் வற்புறுத்தியதால அண்ணன், 1950-களிலேயே சினிமா வாய்ப்புத் தேடிப் போயிட்டாரு. நான் கடைசி வரைக்கும் கோயில், குளம்னே இருந்துட்டேன். முதல் படம் பண்ணுறதுக்கு முன்னாடியே (1946) அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சி. எங்கே தம்பிக்கு பணம், காசை கொடுத்துருவாரோன்னு அண்ணன்கிட்ட எங்கள நெருங்கவிடாமப் பார்த்துக்கிட்டாங்க அண்ணி. கடைசி காலத்துல அண்ணனே வறுமையில வாடுனார்னா, எங்களை எல்லாம் கேட்கவா வேணும்?’’ வருத்தத்துடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

 ‘சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்.. ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே..’ என்றோ சினிமாவுக்காக டி.எம்.எஸ். பாடிய இந்த பாடல் வரிகள் இன்று, அவரது தம்பிக்கே நிஜவாழ்க்கையின் நிதர்சனமாகிப் போனது காலம் செய்த கோலம்தான்!


http://tamil.thehindu.com/opinion/reporter-page

No comments:

Post a Comment