Search This Blog

Tuesday, October 16, 2018

SYMA Medical Centre ~ in Vannam magazine Triplicane


2 ரூபா மருத்துவமனை : இணையற்ற சேவை
சைமாவின் (ஸ்ரீநிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம்)


Srinivas Youngmens’ Association (SYMA) founded in 1977, runs a free Medical Centre for the past 29 years -  this medical centre is popularly known as Rs. 2 hospital .. .. here is an article that has appeared in “Vannam” ~ Triplicane tabloid. **
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" ~ என்ற தொடர் உடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நாம் வாழும் சமுதாயத்தில் அனைவரும், முக்கியமாக பொருளாதாரத்தில் பின்தங்கியவரும் கூட  தம் உடலின் ஆரோக்கியம் பேணிட திருவல்லிக்கேணியில் "சைமா" தம் ஆதரவுக் கரத்தை நீட்டி இருபத்தியொன்பது ஆண்டுகள் முடிந்து, முகமலர்ச்சியோடு முப்பதாம் ஆண்டில் அடிப்பதிக்கிறது. தான் ஆற்றும் சமுதாயப் பணிகளில் மருத்துவப் பணிக்கு சைமா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மருத்துவப் பணியில் மட்டுமே முப்பதாண்டுகள் சேவை என்பதற்கு வண்ணத்தின் த்ரீ சியர்ஸ் டு  சைமா!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் நலனில் அக்கறைகொண்டு சைமா ஆரம்பித்ததே இம் மருத்துவச் சேவை. பொருள் முடை - உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதே சைமாவின் நோக்கம். அதனை நன்குணர்ந்ததால் தான், மெடிக்கல் சென்டரை தற்கால மருத்துவ உபகரணங்கள் மற்றும் நவீன கட்டமைப்பு வசதியோடு சைமா அமைத்து,  தரமான மருத்துவச் சேவையை, இலவசமாக,  மனமார வழங்கிவருகிறது.

கட்டணமில்லாச் சேவை அலட்சியத்தை ஏற்படுத்தும் என்பதால், மிக மிகக் குறைந்த கட்டணமாக 2 ரூபாய் மட்டுமே மருத்துவ ஆலோசனைக்குப் பெறப்படுகிறது. சென்டர் தொடங்கப்பட்ட 1989 ஆண்டுமுதல் இன்றுவரை, என்றென்றும் இதே 2 ரூபாய் கட்டணம் மட்டுமே தொடரும் என்பது,  விளிம்பு நிலை மனிதர்கள் மீதான சைமாவின் பரந்த மனத்தைக் காட்டுகிறது.
Silver Jubilee celebrations of SYMA Medical Centre
From ® Dr J Radhakrishnan, IAS (Health Secy, Govt of Tamilnadu;  Mrs Pankajam Sridhar (Subha Sridhar lighting kuthuvilakku, Dr K Sridhar, Sr. Vice President - Medical & Director - Plastic Surgery, TA Sampathkumar, President & S. Sampathkumar, Secretary)

கட்டணம் மட்டும்தான் குறைவு; பயனாளிகளுக்கு தரப்படும் மரியாதை, சேவை நோக்கத்துடன் கவனித்தல், பண்புடன் பேசுதல் மிக மிக நிறைவு! இதன் காராணமாகவே, பயனாளிகள் மன மகிழ்ச்சி மற்றும் மன நிறைவோடு “ரெண்டு ரூவா ஆஸ்பத்தரி” என்று அழைத்து மகிழ்கின்றனர். இந்த சேவை சைமாவினரால்  ஸ்ரீ காஞ்சி காமகோடி  மெடிக்கல் டிரஸ்ட் உடன் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. இம்மையம் நடத்துவதில் பிரபல மருத்துவ நிபுணர் திரு கே ஸ்ரீதர் ஆரம்ப  நாள் முதல்  நல்ல ஆலோசனை வழங்கிவருகிறார்.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மீது மிகுந்த அக்கறை கொண்ட சைமா மெடிக்கல் சென்டர் பயனாளிகளின் மருத்துவ விவரங்களை,  மருத்துவ அட்டையில் பதிவு செய்து,  மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு கடந்தகால மருத்துவ சரித்திரத்தை மனத்தில் கொண்டு மருந்து மாற்றித் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகச் சிறந்த நடைமுறை.

மன நலம் மற்றும் புறச்சூழல் நோயாளியின் மனத்தை மேம்படுத்தும் வகையில் இனிய வகையில் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே மருத்துவர் நோயாளிகளை தொடர்ந்து கவனித்தால், டாக்டர் மற்றும் நோயாளிக்குமிடையே நல்லுறவு, புரிதல், நம்பிக்கை மூலமாக மருத்துவ கண்காணிப்பு சிறப்பு பெறும், என்ற கொள்கையில் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. தவிர, புதன் கிழமைகளில் -  கண், சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம், நரம்பியல், போன்ற பல துறைகளில் சிறப்பு மருத்துவம், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களின் மூலம் வழங்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்களில் (திங்கள் மற்றும் வியாழன்) காலையில் 'மகப்பேறு நிபுணர்' பெண்களுக்கு சிறப்பு ஆலோசனை என மருத்துவ சேவை விரிகிறது.
Past Presidents of SYMA on stage at 25th year celebrations

மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் முற்றிலும்  இலவசமே ! ~ தொடக்கத்தில் மருந்துகள் இங்கேயே தரப்பட்டன.  மருந்தின் தரத்தையும், மக்களின் மன எண்ணத்தையும் வலுப்படுத்தும் வகையில், தற்சமயம்,   இரண்டு மருந்துக் கடைகளுடன் முன்னேற்பாடு செய்துகொண்டு, சைமா மருத்துவச் சீட்டிருந்தால் இலவசமாக மருந்து என்ற  வழிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த மருத்துவ மையம் ஞாயிற்றுக் கிழமை தவிர வாரத்தின் 6 நாள்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை  செயல்படுகிறது.

2007ல் திருமதி சுகந்தவல்லி என். ராம ஐயங்கார் நினைவாக இரத்த பரிசோதனை நிலையமும் ஞாயிற்றுக் கிழமை தவிர இதர நாள்களில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படுகிறது. இங்கே பல்வேறு இரத்த பரிசோதனைகள் மிக குறைந்த விலையில் செய்யப்படுகின்றன.  இரத்தத்தில் சக்கரை அளவு பரிசோதனை செய்ய ரூ 20/- மட்டுமே என்பது உதாரணம். நமது நிலையத்தில் செய்யப்படும் பரிசோதனைகள், நாம் இணைந்துள்ளமிக பிரபல நிறுவனமான மெடால்  லேப்பில்பரிசோதனை செய்யப்பட்டு - மருத்துவ விவரங்கள்வெளி வருவதால், மிக்க நம்பிக்கைத்தன்மைவாய்ந்ததாக மருத்துவர்களால் போற்றப்படுகின்றன.

ஈடில்லா மருத்துவச் சேவையாற்றும் சைமாவின் மக்கள் நலத் திட்டங்களைப் பொது மக்கள் அறிந்து அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே சைமா நிர்வாகிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது. அனைவரும் வருக, பயன் பெறுக என்று சைமா அன்போடு அழைக்கிறது.

மருத்துவ சேவை தவிர சைமா பலபல சேவைகள் செய்து வருகிறது.  சைமாவின் கல்வி மையம் நல்ல தரமான கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது.  இரத்த தானம் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் சைமா மெடிக்கல் சென்டரில் பதிவு செய்து கொண்டு இரத்த தானம் செய்து நவீன பிரம்மா ஆகலாம்! நமது இணைய தளத்தில் (www.syma.in) இரத்ததானம் செய்ய விருப்பம் உள்ளோர் விவரங்கள் உள்ளன.

மண் மூடிச் சாகும் முன்னே கண் தானம் செய்து மறைந்தும் மற்றவர்களுக்கு விழிகள் தானம் அளிப்பதன் மூலம் இவ்வுலகை கண்டு ரசிக்க முயல்வோம்.  கண் தானம் செய்ய விரும்புவோர் சைமாவை அணுகினால், அதற்கான வழிமுறைகளைக் காட்ட சைமா தயாராக இருக்கிறது.

மழைநீர்ச் சேமிப்பு - :  மழை நீரை வீணாகாமல் நிலத்தடியில் தேக்கி சேமிப்பது மிகமிக அவசியமானது.  ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்குளத்தில் இத்தகைய மழை நீர் சேகரிப்பதில், சைமா பெரும்பங்கு வகித்துள்ளது.  வீடு மற்றும் அலுவலகங்களில் மழைநீர்ச் சேகரிப்பு திட்டம் செய்தவர்கள் அதனை புனரமைத்தும், இதுவரை செயல்படுத்தாதவர்கள் உடனடியாக ஏற்படுத்தியும் நிலத்தடி நீர் மட்டம் குறையாதிருக்க விழிப்போடு இருங்கள் என்ற விழிப்புணர்வையும் சைமா விதைக்கிறது. இதற்காகவும், சைமாவை அணுகினால் ஆலோசனைகள் வழங்கிட சைமா தயாராக உள்ளது. 

நமது சமுதாயத்தை சிறப்பிக்க, நமது சுற்றுப்புற சூழலை மேம்படுத்த, சமுதாய பணிகளில் பங்குபெற விருப்பமுள்ள அனைவரையும் எங்களோடு சேர்ந்து பணி செய்ய - சைமா அன்புடன் அழைக்கிறது. மேலும் விவரங்களுக்கு  :  ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம், 29 துளசிங்க தெரு, திருவல்லிக்கேணி சென்னை 5 (பாரதியார் இல்லம் எதிரில்); தொலைபேசி : 28445050; மின் அஞ்சல்: srinivasyoungmensassociation@yahoo.co.in  இணையம்: www.syma.in  - தொடர்பு கொள்ளவும்.

SYMA and its social services have been highlighted in many media - “Vannam” ~ is a local magazine ‘ Triplicane tabloid’ – and the article is a subsidized promo.  This issue of Vannam is Deepavali Special and its Editor (Satyan Layout, VR Pillai 2nd lane) is printing 10000 copies.  This is an attempt of SYMA to reach out to more no. of people, trying to make more deserving people utilize our medical services.


No comments:

Post a Comment