பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான் !!,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை; சாவுமில்லை,கேளீர்,கேளீர்!
சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு உன்னத பிறவி.
கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர்
மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி - தன் காலத்துக்கு
மிகவும் பல்லாண்டுகள் பிறகு நடக்க வல்லவை
பற்றி கூர் நோக்குடன் சிந்தித்தவர். நம் கருத்துக்களை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று
ஒருநாள் கண்ணன் கேட்டார். அதற்கு பாரதி, ‘ஏனெனில் நம் கருத்துக்கள் இன்னும்
நானூறு ஆண்டுகள் கழித்து சொல்லப்பட வேண்டியவை. இவர்களால் புரிந்துகொள்ள முடியாது’ என்றார்.
பாரதி மஹாகவி மட்டுமல்லன் ! ~ கவிதை அவர்க்கு
சரஸ்வதி தேவியின் வரம். அவரது சிந்தனை, வார்த்தைகள், செயல் எல்லாமே தேசபக்தி. விடுதலை உணர்வு ~ ஆங்கிலேயர்க்கு
அடிமைப்பட்டிருந்த பாரதத்தை உலுக்கி எழுப்பின அவர்தம்
பாடல்கள். அவர்தம் எண்ணங்கள் காலத்தை கடந்தவை. உண்மையிலேயே அவர் தாம் வாழ்ந்த காலத்தினை தாண்டி
சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி.
House at Triplicane where
Bharathiyar lived .. ..
பாரதியார் குறைந்த காலமே வாழ்ந்தாலும்
சாதனைகள் செய்தவர். இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர
சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.
For most people, Sept. 11 draws remembrance to that ghastly
terrorist attack that shook the United States.
Sept. 11, 2001, will always be recognized as a day of tribulation in the
United States. Some 3,000 people lost their lives in multiple terrorist attacks,
the largest one being the fall of the World Trade Center’s twin towers in New
York City. Thousands of first responders and civilians risked their lives to
save others.
It is 18 years since – for some life has changed, for it
stands frozen and there are those who are deeply impacted by that ghastly act
of terrorism. It is not simply the count of dead or those maimed, the toll is
actually more. Many forms of carcinogens
were left in the air and inhaled by thousands of people. General illnesses
caused from high levels of dust inhalation have attributed to chronic coughs
and asthma for bystanders and first responders. Most severely, multiple forms
of leukemia, melanoma and mesothelioma cancers have been linked to the
destruction at the World Trade Centre in 2001.
Sadly, it is reported that many
diseases linked to 9/11 have latency periods of 10 to 20 years, meaning some of
the potential health impacts of the tragedy are yet to come.
This day, Sept. 11, is
remembered World over for various reasons ! -
this post is slightly different -
we mourn the great loss of the Nation on this day 98 years ago (actually a day
later). The man, the fighter, the poet
Mahakavi Subrahmanya Bharathiyar. He was
a Genius, Extrovert, Patriot, Poet,
Thinker, man who dreamed beyond his time, an eternal Optimist, man with die-hard spirit,
motivator, man capable of uniting great minds, natural leader – all rolled one.
Most unfortunate thing was his age – his life was too short - he lived for only
39 years and passed away 98 years ago.
Mahakavi Subramanya
Barathi lived in Thulasinga Perumal Kovil Street (TP Koil Street) during his
last years – he was a tenant in a small portion (single room) in the house seen here (Sri Kannan Sri Jayanthi
purappadu)
At the age of seven, Subbiah started writing poems in Tamil. When he was eleven,
he wrote in such a way that even learned men praised him for his great
knowledge and skill. The boy who was till then referred to as “Ettayapuram Subbiah” was
proudly referred as “Bharathi” thenceforth by nationalists and by millions of Tamil
lovers all over the globe. In June 1897,
at a very young age of 15 (customary those days) his marriage took place, and his child-bride was
Chellammal. Bharathi left for Benaras (Kasi). He lived there the next two
years with his aunt Kuppammal and her husband Krishna Sivan. He learnt with flair and became expert in Sanskrit,
Hindi and English, passing with credit
the Entrance Examination of the Allahabad University. The Benares stay brought about a tremendous change in
Bharathi’s personality. His personality
and looks too changed – he started sporting a
twirled moustache; a turban and acquired a bold swing in his walk.
He
lived the life of a fearless journalist reaching great heights. He rose to become sub-editor of “Swadesamitran” in Nov 1904. .. .. his prime of life was spent running away from
the British ensuring that the fire for freedom was stoked with his powerful
words. “India” the magazine saw
the light of the day in May, 1906. It declared as its motto the three slogans
of the French Revolution, Liberty, Equality and Fraternity. It blazed a new
trail in Tamil Journalism. In order to proclaim its revolutionary ardour,
Bharathi had the weekly printed in red paper. “India” was the first paper in
Tamil Nadu to publish political cartoons. He also published and edited a few
other journals like “Vijaya”.
In
May 1907, Bipin Chandra Pal visited Madras and gave six lectures on the
Triplicane Beach every day evening from 3 to 8. These lectures brought out a
perceptible change in the attitude of the people. Bharathiyar wrote in his
India on 11 May 1907, that the visit and speeches of Pal had cast a miraculous
effect on the otherwise slumbering people of Madras. After the visit in every
street and in every place the talk was only about Nationalism and the first
utterance was Vande Mataram. His
association with VO Chidambaram Pillai became
more intimate, the latter floated his Swadeshi Steam Navigation Company in
1906. Bharathi helped him in getting contributions for shares in the company
and donations. The great man hailed as Kappalottiya thamizhan fought Imperial British traders challenging them at
sea. The British, irked by this, foisted
on VOC serious charges of sedition and
conspiracy, and sentenced him two life
terms of rigorous imprisonment whence he was physically assaulted and
humiliated. Barathiyar too underwent harassment and was
severely injured in prison, which in fact led to his death.
On
August 4,1921, he wrote an article in “ Swadesamitran ” describing his Erode
visit, and on the problem of conquering death and living in eternity. In a poem
addressed to the god of death, Yama, (“காலனுக்கு உரைத்தது”) Bharati
wrote that he would never let death come anywhere near him, and that he would
kick death with his foot should death dare approach him.
History
written by British has it that the elephant of Sri Parthasarathi temple
trampled him to death ~ though an incident of elephant brushing Mahakavi
Subramanya Barathiyar did occur, he lived for more than 3 months after that
reported incident – and most probably died to failing health, derived from the
boot blows and harsh treatment meted out in prison by British authorities –
which is comfortably hidden in history.
மஹாகவியின் இனிய நண்பர் 'குவளை கண்ணண் என்பார். ஸ்ரீ
பார்த்தசாரதி கோவில் சம்பந்தப்பட்ட இவர் பாரதியுடனே இருந்து அவரை நன்கு பேணிக்காத்துள்ளார். இதோ
பாரதியின் வரிகள், குவளை கண்ணனைப்பற்றி :
மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியாராவார்;
மகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்,
வெள்ளையர் தம் அடக்குமுறை, எப்போதும் ஓட்டம், பசி, பிணி
போன்றவற்றால் வாடிய மஹாகவிஞனை - "கோவில் யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையை
பரப்பியுள்ளனர். யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு ஜூன் மாதத்தில்
நிகழ்ந்ததாம்; அப்போது அவரை குவளை கண்ணன் காப்பாற்றியுள்ளார். அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல
"சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார்.
ஜூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில்
பாரதியார் பேசிய உரையின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை." - அவர்
இறந்ததோ செப்ட் 12 அதிகாலை !!!
Signature of C. Subrahmanya
Barathi
1882, டிசம்பர், 11ல் எட்டயபுரத்தில்
பிறந்த மகாகவி பாரதி, 1921, செப்டம்பர், 11ல், சென்னையில் இறந்தார் என்பது பன்னாள்
வரலாறு. தமிழக, புதுச்சேரி அரசுகள், செப்டம்பர், 11ம் தேதியை, பாரதியின் நினைவு
நாளாக அனுசரித்து வந்துள்ளன. திருவல்லிக்கேணி
இல்லத்தில் அவரது நினைவு நிகழ்வுகள் செப்ட் 11ல் நடந்துள்ளன. ஆயினும் - அந்த கொடிய
நாள் செப்ட் 12 - (அதிகாலை). சென்னை மாநகராட்சி
பதிவேட்டில், செப்டம்பர், 12ல், இறந்தார் என, பதிவாகி உள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில், தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், பாரதி பாடல் ஆய்வுப் பதிப்பு நுாலிலும், 1921, செப்டம்பர்
12, 01:30 மணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாகவி வாழ்ந்த மண்ணில் வாழ்வதை பெருமையாக கருதும் - பாரதியின்
பற்றாளன் - திருவல்லிக்கேணி வாழ் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
12.09.2019
PS : the confusion in date is rather trifle. It was on the night of 11.9 – rather early
hours of 12.9. In his Death certificate
[downloadable from Chennai Corporation website] – his name is misspelt as ‘C
Subramani Barthy’ ! – address is 67 TP Koil Street; Date of death given as
12.9.1921 – age again wrongly given as 38 instead of 39. Perhaps all that
reflects the care and concern ! Sad !!!
death certificate downloaded from Chennai Corporation website
Excellent article Sir, good morning.
ReplyDeleteThank you so much Sir
ReplyDelete