Pages

Tuesday, May 5, 2020

Uncha Vruthi - Saint Thiyagaraja and his devotion to Lord Rama - நிதி சால ஸுகமா !


‘நிதி சால  ஸுக மா ராமுநி ஸந்நிதி ஸேவ  ஸுகமா’ –

செல்வம் முதலியன மிகுந்த இன்பத்தை அளிக்ககூடியவையா? அல்லது ஸ்ரீராமரின் ஸந்நிதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே! உண்மையாக இதை கூறுவாயாக. தயிர், வெண்ணை, பால் சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனை த்யானித்து பஜனை செய்வது ருசி தருமா? அடக்கம், சாந்தம் எனப்படும் கங்கா ஸ்நானம் சுகமா அல்லது சிற்றின்பமென்னும் சேறு நிறைந்த கிணற்றில் நீராடுவது சுகமா?  அகம்பாவத்தினால் பினைக்கபெற்ற மனிதரை பாடுதல்  சுகமா?  அல்லது நன்மனத்தனாகிய  இத் தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத்  துதிபாடுதல் இன்பமா?

திருவல்லிக்கேணியில் பல அற்புத விழயங்கள் உண்டு.  பெருமாள் புறப்பாடுகள் - உத்சவங்கள் அற்புதமானவை. இது ஒரு புண்ணிய பூமி - அற்புத கோவில்கள் பல அமைந்துள்ள திருத்தலம். நூற்றாண்டு தாண்டிய கல்லூரிச்சாலைகள்; பல மஹான்கள் வாழ்ந்த ஊர். தவிர இயல், இசை, நாடக தமிழும் என்றென்றும் தழைத்து ஓங்கும் ஊர்.  சிறு வயதில் மனதில் படிந்த ஒரு நிகழ்சி. மிக வயதான பெரியவர், சிகப்பு பட்டு தலையில் உடுத்தி கையில் தம்பூராவுடன் கணீர் குரலில் (வேகாத வெயிலில்) சிறப்பாக தெலுங்கில் பாடி வருவார்.  வீட்டு வாசலில் அவரை சேவித்து - அவரது கையில் இருக்கும் செப்பு செம்பில் பச்சரிசி இடுவர்.  அவர் சில அரிசிமணிகளை தர அவற்றை பாத்திரத்திலோ அல்லது வஸ்திரத்திலோ பெற்று மறுபடி வீட்டில் இருக்கும் அரிசி பாத்திரத்தில் அவற்றை பத்திரமாக கொண்டு சேர்ப்பர்.

நமது எழுத்துலக ஆசான் 'சுஜாதா' எழுதிய ஒரு கதையின் ஆரம்ப வரிகள் இங்கே **  :    சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். 



There are 2 sets of people ~ connoisseurs of music, especially the Carnatic one, who know the nuances; others who know nothing !! ~ … ~  I belong to the latter variety and hence this post may not be anything complete….. If you are to listen to radio or watch TV these days, unmistakably, you would hear about pancharatna kirtis and more of Carnatic music.  A small town on the banks of Cauvery has thousands visiting the place and staying there too…

It is the town of Thiruvaiyaru in Thanjavur District in Tamil Nadu, situated on the banks of the river Kaveri, 13 km from Thanjavur.  It houses the century old Siva temple dedicated to Panchanatheeswar. Thiruvaiyaru is more renowned for its association with Saint Thyagaraja, who, along with Muthuswami Dikshitar and Shyama Sastri, comprises the Trinity of Carnatic music.

Thyagaraja was an inspired composer. Most of the compositions were the product of inspiration . It will be interesting to know how his disciples readily recorded in notation those songs which flowed down his mouth during moments of inspiration on Ekadasi and other sacred days.  Thyagaraja began his musical training under Sonti Venkataramanayya, a noted music scholar, at an early age. Sonti Venkataramanayya invited Thyagaraja to perform at his house in Thanjavur. On that occasion, Thyagaraja sang  Endaro Mahaanubhavulu, the fifth of the Pancharatna kritis. Pleased with Thyagaraja's composition, Sonti Venkataramanayya informed the King of Thanjavur about Thyagaraja's genius. The king sent an invitation, along with many rich gifts, inviting Thyagaraja to attend the royal court. Thyagaraja, however was not inclined towards a career at the court, and rejected the invitation outright, composing another gem of a kriti, “Nidhi Chala Sukhama”  ‘நிதி சால  ஸுக மா ராமுநி ஸந்நிதி ஸேவ  ஸுகமா’   Thyagaraja, unable to bear the separation with his Lord, went on pilgrimages to all the major temples in South India and composed many songs in praise of the deities of those temples.


He was an ardent devotee of lord Rama. In his praise and honour he wrote numerous musical operas.  Of the many thousands written by him, only about seven hundred survive. As per the oral tradition, all these songs are passed on from a teacher to a student and are sung till date.  Tyagaraja lived a long and austere life, like a saint, and passed away in  1847.  Tyagaraja’s songs and compositions are full of devotion to his god Rama. It is in this context his music and life must be studied.


He never cared for his food, wealth, people, King or anyone else – his devotion to Sree Rama was of a different class, not easily understood by lesser mortals.

You may have heard this -  శ్రీ రామ   పాదమా  నీ కృప చాలునే!  చిత్తానికి రావే  
srirAma pAdamA nee krupa jAlunE chittAniki rAvE|| O divine feet of Srirama, your mercy is abundant; please be with me and reside  in my conscience always. Here is a link to the song by Jesudoss available in Youtube. : Sree Rama Padama

உஞ்ச நோன்பு {உஞ்சவிருத்தி} என்பது தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு, அவற்றுக்குரியவர்கள் அவற்றை எடுத்துச் சென்றதும் வயலில் எஞ்சியிருக்கும் தானியங்களைச் சேகரித்து அஃதை உண்டு வாழும் வாழ்க்கையாகும். இது பின்பற்றுவதற்கு மிகக் கடினமானதாகும். எனவே அது தொடர்புடைய தகுதியும் {புண்ணியமும்} மிகப் பெரியதாகும்" -  தமிழில் மஹாபாரதம் (செ.அருட்செல்வப் பேரரசன் திரு.கிசாரி மோகன் கங்குலியால்  மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்.)

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவதாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்சவிருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம்.  யதிகளுக்கு எந்த விதமான சொத்தும் இருக்காது.  அடுத்த வேளை உணவு கூட எங்கே இருந்து எப்படி வரும் என்பது பற்றிய கவலை இருக்காது !

முதலில் சொன்ன வரிகள் 'சுஜாதாவின் உஞ்ச விருத்தி' என்ற சிறுகதையின் ஆரம்பம்.

திருவரங்கம் மதில்கள் கொண்ட வீதிகளில்  ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.‘‘ரங்கு, இது யாரு?’’ ‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பினு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’

           எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள். ‘‘உஞ்சவிருத்தி.’’‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம். ’‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’ ‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திரமங்கலத்தில் நெலம் எல்லாம் இருக்கு.’’‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’‘‘புரியலை ரங்கு.’’‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும். எஸ்.எஸ்.எல்.சிக்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹை-ஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே !.’

 ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’ ‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயணனே  மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’ ‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக்காகவா?’’‘‘ஆமா, வேறென்ன..?’’‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’‘

கதை முழுக்க உஞ்ச விருத்தி பற்றியதல்ல ! ~ சொத்து எப்படி - கிழவனாரின் பாரம்பரிய சொத்து எப்படி அவர் தனது மகன்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கோ எழுதுகிறார் - அது எப்படி பயணிக்கிறது என்பது பற்றியது

நாதோபாசனை, உஞ்சவிருத்தி... எதிலும் ராம நாமம்! இசையாக வாழ்ந்த மகான்! தியாகராஜர் .. .. உஞ்ச விருத்திக்கும் (தனக்கென எதுவும் அடுத்த வேளைக்கு  தேவையறியா உன்னத நிலைக்கும்) பிச்சைக்கும் வித்தியாசம் தெரியா பொய்யில் ஊறும் ஒரு உளறுவாயன் கூறுவதை தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடி உச்ச புகழையும் செல்வங்களையும் பெற்ற வித்வான்கள் நிச்சயம் கண்டிக்க வேண்டும்.

Incidentally, the house of the grand old man of Tamil literature (Tamil Thaatha), U.V. Swaminatha Iyer at Thiruvatteeswararpettai was named ‘Thiyagaraja vilas’.

Tyagayya (త్యాగయ్య) is a 1946 film, considered as masterpiece, produced and directed by Chittor V. Nagaiah.  In 1981  Tyagayya  directed by Bapu. starring  Somayajulu with KV Mahadevan’s music hit the screens – it had more than 50 songs.  Bangalore Nagarathnamma a Carnatic musician,  built a temple over the samadhi of  Tyagaraja at Thiruvaiyaru and helped establish the Tyagaraja Aradhana festival in his memory.

With regards to Saint Composer Thiyagayya
S. Sampathkumar
5.5.2020.
Photos in this post taken during ‘Thiyagaraja’ drama of Dr TV Varadharajan at Mahakavi Barathiyar Illam, organized by SYMA in memory of late Mr NKT Muthu

No comments:

Post a Comment