Pages

Saturday, August 1, 2020

மந்தார மலரே ! - தையல் இலை முதல் ஆத்திச்சூடி வரை !


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே.
ஆத்தி (திருவாத்தி பூமாலையை)  சூடி-அணிபவராகிய சிவபெருமான்  விரும்பிய விநாயகக் கடவுளை  வாழ்த்தி வாழ்த்தி  வணங்குவோம் நாமே.  Invocation song of a very famous Tamil literary work  !


Covid has forced people to remain at homes ! ~ some are eating more times and more dishes than what they would do normally when they would go to Offices while some have remained alone and not getting the varieties of foods they used to eat outside and order online !.. .. in olden days, people used to cook and eat but in recent decades, in cities you find so many eateries and more importantly so many Online Apps and food deliveries placed on ordering Online.  There would be so much of package and the recent ban on plastic curbed this a lot ! – otherwise a full-meal from a famous Hotel would have 15 or more plastic packets !!

Vegetables have leaves.  Some are leaf vegetables, also called leafy greens, salad greens, pot herbs, vegetable greens, or simply greens – the leaves of such plants are eaten – some green in salads and some cooked / partially cooked.  Every food item that is served outside its manufacturing place, would need packaging.  Food packaging is a big industry and unique.   A package provides protection, tampering resistance, and special physical, chemical, or biological needs.  It is critical to maintain food safety during processing, packaging, storage, logistics (including cold chain), sale, and use.

In early days a satisfactory meal for an important person would only be served on a banana leaf [thalai vazhai].  Bananas are tasty, healthy nutrients and food would be served on  its broad  leaves.   Sometimes banana leaves are used for cooking too. .. .. have you eaten food on any other leaves – badam leaves, lotus /lily leaves.  Remember that a few decades ago, the famous Vadivudai Amman kadai of Triplicane would pack butter on ‘lotus leaf’ – and we used to eat hot rasam rice on the leaf which would have some remnant ghee !

~then the readily available leaf for serving food at home was ‘thaiyal ilai (literally stitched leaves) [mantharai leaves] பண்டை காலங்களில் உணவு உண்ண வாழை இலைகளையும் அடுத்ததாக மந்தாரை இலைகளையும் [தையல் இலை/ மலையாத்தி என்றும் சொல்வார்கள்] பயன்படுத்தினார்கள்

தையல் இலை  என்பது  உணவு உண்ண உலர்ந்த இலைகளைக் கொண்டு செய்யப்படும் உண்கலமாகும். இது பெரும்பாலும் குங்கிலிய இலை, மந்தார இலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. ஆலிலையும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 8 இலைகளை சிறு ஈர்க்குச்சிகளைக் கொண்டு வட்ட வடிவில் தைத்து இது தயாரிக்கப்படுகிறது. சமீப காலங்களில் மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் கடைகளில் இவைகளை கண்டுள்ளேன். 


மலையாத்தி அல்லது மந்தாரை (Bauhinia variegata) பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் பூ, ஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதனை ஆர்க்கிட்மரம் (Orchidtree) என்றும் அழைப்பதுண்டு. சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம் மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலை 10-20 சதமமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டது. இவ்விலையின் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 சமீ விட்டம் கொண்டவை. 15-30 சமீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.  இதற்கு இவ்வளவு அழகான பூக்கள் உண்டு என்பது நான் இதுவரை அறியாதது. மந்தார மலரே ! மந்தார மலரே  !! - நீராடி முடித்தாயோ ! என்பது - ' நான் அவன் இல்லை ' என்ற படத்தில் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு பாடல்.
from Wikipedia

அத்தி என்பதே ஆத்தி என மாறியுள்ளது !  சேரருக்குப் பனம்பூவும் பாண்டியருக்கு வேப்பம்பூவும் சோழருக்கு அத்திப்பூவும் அடையாள மலர்களாகும். அத்தியை ஆத்தி எனவும் குறிப்பிடுவர் என அறிகிறேன். கரிகால்சோழனின் மகளை மணந்த அவனது தங்கைமகனுக்கு அத்தி என்ற பெயரும் உண்டு என்பதைச் சிலப்பதிகாரமும் தொல்தமிழ் [சங்க]ப் பாடல்களிலும் காண்கிறோம். 

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள். இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதுவதற்குத் தயாராக நின்றார்கள். அந்த நேரத்தில், கோவூர்கிழார் அவர்களைச் சந்திக்கச் சென்றார். இருவரிடமும் சமாதானம் பேசி, போரை நிறுத்த முயன்றார். அப்போது அவர் பாடிய பாடல் இப்படித் தொடங்குகிறது:

'இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே.'

மன்னா, எதிரே நிற்பது யார் என்று பார். அவன் கழுத்தில் என்ன மாலை இருக்கிறது என்று கவனி.' அவன் வேறு குல அரசன் அல்லன்,  அவனும்  ஆத்திப்பூ அணிந்த சோழன்.  நீங்கள் இருவரும் மோதினால் தோற்கப்போவது ஒரு சோழன்தான் ! , எனவே இந்தப் போரை விட்டுவிடுங்களேன். இருவரும் நண்பர்களாகி விடுங்களேன்! - என்று அறிவுரை வழங்கி   ஒரு போரையே நிறுத்திவிட்டார் கோவூர்கிழார். அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்பட்டன!

மந்தாரையின் இன்னொரு பெயர் தான் ஆத்திப்பூ ! சிவனுக்கு உகந்த பூ; அதனால் தான் ஆத்திச்சூடி என்று ஔவையும் பாடினாள் [நன்றி : திரு குருஜி கோபாலவல்லி தாசர்].  ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி.


Āathichoodi (ஆத்திசூடி) is a collection of single-line quotations written by Avvaiyar and organized in alphabetical order. There are 109 of these sacred lines which include insightful quotes expressed in simple words. It aims to inculcate good habits, discipline and doing good deeds.  Here are few of them :
அறம் செய விரும்பு
        அறம், தருமம் செய்ய நீ விரும்புவாயாக
        நல்ல செயல்களைச்  செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

ஙப் போல் வளை.
        'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
        "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

கௌவை அகற்று
        வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

 சையெனத் திரியேல்
        பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

தோற்பன தொடரேல்
        ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நுண்மை நுகரேல்
        நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

நைவினை நணுகேல்
        பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

With regards – S. Sampathkumar
21.7.2020.

No comments:

Post a Comment