Pages

Thursday, October 1, 2020

Ambuli mama artiste - Sankaran mama is no more ! - Vikramaditya brought to our eyes

 

சிறு வயதில் நாம் அனைவரும் தவறாமல் படித்த புத்தகம் - 'அம்புலிமாமா'! .. .. அந்த காலத்தில், நமது பொருளாதார நிலைமையில், புத்தகங்கள் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. கங்கைகொண்டான் மண்டபத்தின் ஒரு பக்கத்தில், காய்கறி அங்காடிகளுக்கு எதிரில் பழைய புத்தக கடையில் - அம்புலி மாமா இதழ்கள் (பழையன) பல தொங்கும்.  பழையதோ, புதியதோ - கதை ஒன்றுதானே !  ... விறுவிறுப்பு சற்றும் குறையாது.

புத்தகத்தின் கவரும் அட்டைப்படத்தை புரட்டி உள்ளே சென்றால், இரண்டாவது கதை எப்போதுமே - விக்ரமாதித்தன் - வேதாளம்' கதை !

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய வேதாளத்தை  கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு  செல்லுகையில், வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது - இப்படித்தான் முன்னொரு காலத்தில் ... ஒரு நாட்டில் .. என கதையை ஆரம்பித்து, ஒரு கேள்வி கேட்கும்.  கதை முடிவில் மன்னன் மிகச்சரியான பதிலை அளிப்பான்.  விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே,  தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது- என கதை முடியும்.  மற்றோரு கதை அடுத்த இதழில் தொடரும்.

போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் கிடைக்கப்பெறுகிறது.  அந்த சிம்மாசனத்தில் 32 படிகள் இருக்கின்றன. அந்த சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி செய்ய விரும்பும் போஜராஜன் அதன் மீது ஏறப் போகும் போது அந்தப் படிகளில் இருக்கும் பதுமைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. "இந்த சிம்மாசனம் வீரமும் அறிவும் பராக்கிரமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த விக்கிரமாதித்ய மகாராஜா அமர்ந்திருந்தது. இதில் ஏறி அமர உனக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்" என்று கேலி பேசுகின்றன. அந்தப் பதுமைகளில் முதல் பதுமை விக்கிரமாதித்ய ராஜா பற்றியும் அவனுடைய மதியூக மந்திரி பட்டி பற்றியும் இந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து அவனுக்குக் கிடைத்த கதையையும் சொல்கிறது.

காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டுவந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். மகா பராக்கிரம சாலியான மன்னன் விக்ரமாதித்தன்.

 

As described in Tamil, the book that we read with great interest was ‘Ambuli Mama’ (lit. Moon Uncle) and in that in every issue would be featured the story of King Vikramathithya and Vethalam.  

 

The hugely popular Chandamama  (Ambuli Mama in Tamil) magazine was a classic Indian monthly magazine for children which depicted mythological and historical stories. It was famous for its illustrations. Originally started in Telugu by B.Nagi Reddy and Chakrapani, well known Telugu Film producers; it was on Tamil right from the start.  It later got printed  in twelve Indian languages as well as English. The last issue of the magazine was published in March 2013 !.    Kodavatiganti Kutumba Rao, a very close friend of Chakrapani and a literary colossus in Telugu Literature,  edited it for 28 years, till his death in August 1980.

 

In 2007, Chandamama was bought by Geodesic, a Mumbai-based software services provider company. They planned to take the then 60 year old magazine into the digital era. However the magazine is currently defunct  

The story of Vikramaditya and Vedal would be lucidly written with great illustrations bringing it to life.  It was the handiwork of KC Shiva Shankaran, fondly Sankar mama, to its readers.  Sankaran studied at Muthialpet High School when the drawing teacher discovered his innate talent.    


Sad to know the passing away of the artiste Sankar mama due to old age today  – he was 94

With grief – S. Sampathkumar

29.09.2020.

Pic credit : Tamil Indian Express 

 

 

1 comment:

  1. பல கொஞ்சமும் தெரியாத விஷயங்கள்... மிக்க நன்றி.

    ReplyDelete