Pages

Tuesday, December 1, 2020

இது என்ன பூ ? .. this is flower of Coleus amboinicus

இது என்ன பூ ?  ..  this is flower of Coleus amboinicus,  a semi-succulent perennial plant in the family Lamiaceae  !!       A member of the mint family Lamiaceae, Coleus amboinicus grows up to 1 m (3.3 ft) tall. The stem is fleshy, about 30–90 cm (12–35 in), either with long rigid hairs (hispidly villous) or densely covered with soft, short and erect hairs (tomentose). Old stems are smooth (glabrescent). Leaves are 5–7 cm (2.0–2.8 in) by 4–6 cm (1.6–2.4 in), fleshy, undivided (simple), broad, egg/oval-shaped with a tapering tip (ovate).




"காடெல்லாம் பிச்சிப் பூவூ , கரையெல்லாம் செண்பகப் பூவூ"  - படித்த உடனே உங்களது உதடும் சேர்ந்து பாடியிருந்தால் உங்களுக்கு 50 வயது இருக்கலாம்.  செண்பகமே செண்பகமே, தென்பொதிகை சந்தனமே - தேடி வரும் என் மனமே - ஆஷா போன்ஸ்லே பாடியது என உதிரி தகவலையும் தெரிந்தவராயின், நீங்கள் இசைஞானி இளையராஜாவின் பித்தர் !!  

செண்பகப்பூ மணமான பூ ! - மதுரைக்கார ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரனில் அனைவரையும் மணக்க வைத்தான்.  “பிச்சிப்பூ” - என்ன பூ ?  - தெரியுமா? பார்த்து இருக்கீங்களா?  மதுரை-தூத்துக்குடி, தெக்கத்திப் பக்கம் பலருக்கும் தெரியும்! நமக்கு அறிமுகப்படுத்தியவர் மறுபடி இசைஞானி தான்.   உச்சி வகுந்தெடுத்துப், “பிச்சிப் பூ” வைச்ச கிளி… என்கிற காவியப் பாடலின் வாயிலாக ! - படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி--  வாணி ஜெயராம் குரலில் என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்தது.  

பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன:: மல்லிகை, முல்லை, செண்பகம், தாமரை,மகிழம், ரோஜா, அல்லி  மற்றும் விருச்சி, செங்காந்தள்; ஆம்பல்; அனிச்சம்; குறிஞ்சி ;வாகை; வகுளம் ; கோங்கம்;-  என எவ்வளவோ நறுமலர்கள் உள்ளன. பூக்களை அழகாக தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது.  ஒரு நாட்டில்அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம்.

 




Ambon Island is part of the Maluku Islands of Indonesia. The island has an area of 775 km2 (299 sq mi) and is mountainous, well watered, and fertile. Ambon Island consists of two territories - the city of Ambon to the south and various districts (kecamatan) of the Central Maluku Regency to the north. The main city and seaport is Ambon (with a 2014 population of 368,987), which is also the capital of Maluku province.  Ambon has an airport and is home to the Pattimura University and Open University (Universitas Terbuka), state universities, and a few private universities. 

Coleus amboinicus, synonym Plectranthus amboinicus,  is a semi-succulent perennial plant in the family Lamiaceae with a pungent oregano-like flavor and odor. The origin of Coleus amboinicus is unknown, but it may be native to Africa, and  India. Coleus amboinicus is widely cultivated and naturalized elsewhere in the tropics where it is used as a spice and ornamental plant.  Common names in English include Indian borage, country borage, French thyme, Indian mint, Mexican mint, Cuban oregano, soup mint, Spanish thyme.  The species epithet, amboinicus refers to Ambon Island, in Indonesia, where it was apparently encountered and described by João de Loureiro (1717 – 1791)

கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடி,  இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும்.  வீடுகளில் எளிதாக வளர்க்க வல்லது.  இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா!  [இது பூக்கும் என்பது எனது சிற்றறிவுக்கு சற்று முன்னரே எட்டியது !]


மணம்மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு உண்டானது. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி (prefix) சேர்க்கப்படுவது வழக்கம். ‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி - விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது.   வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும்.  இலைத்தண்டுகளை நட்டாலே (வேர் இல்லாமல் கூட) இவை சில மாதங்களில் செடியாக வளரும்.  

·        கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

·        வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

·        நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

·        இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

·        கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

·        தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

·        மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.



Interesting !  .. .. the advantage of not knowing anything is – it offers chances for learning new things every day !!

Regards – S. Sampathkumar
31.10.2020. 

2 comments:

  1. தெரியாத செய்தி.எங்கள் வீடுகளில் செய்திதான் நிறைய உள்ளன.பூ பார்த்தது இல்லை.. but nice

    ReplyDelete
  2. செடிதான் உள்ளது./செய்தி தவறு

    ReplyDelete