Pages

Friday, October 1, 2021

Focus and out-of-focus !! - மரத்தில் மறைந்தது மாமத யானை

இன்றைய பதிவு - ஒரு படப்பதிவு  - ரோஜா பூக்கள் !!

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

இது நாம் பலதடவை கேட்டுள்ள ஒரு சொல்லாடல்.  சிலருக்கு நாய்களை பிடிக்காது.  அவற்றை கண்டாலே - கல்லாலோ கொம்பாலோ அடித்து விரட்ட முயல்வர்.  சிலருக்கு நாய் வளர்க்கவும், அவற்றுக்கு உணவணித்து பராமரிக்கவும் பிடிக்கும்.  இந்த சொல்லாடலுக்கு - நாய் கண்ணில் தென்படும் போது கல்லைக் காணோம். கையில் கல் கிடைக்கும் போது அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை என்பது அர்த்தம் அல்ல !!  பேச்சுவழக்கில் வார்த்தைகளை மாற்றுவது போல பழமொழியையும் மாற்றி அதற்கு புதிதாக அர்த்தத்தையும் வழங்கியுள்ளனர் சிலர்.   இதை விட சிறந்த பழமொழி :

மரத்தை மறைத்தது மாமத யானை - மரத்தில் மறைந்தது மாமத யானை

Photography is an area of experts !  and hence this post is not intended to be scholastic or claim to any mastery.. just two photos taken this evening in fading light and some views on that.

One important technique to understand in photography, especially when you’re starting out, is the concept of focus. If you don’t focus properly, you will end up with blurry photos even when all your other camera settings are correct. Focusing can be easy or difficult depending on your subject, like a nonmoving landscape versus a fast-moving bird in flight. Focus in photography is the process of making adjustments to the lens to find the maximum resolution, sharpness, and contrast for your chosen subject. You can do so either using manual focus or the autofocus system of your camera.

Every aspiring photographer tries to take some photo focusing on some object – flowers, especially Roses are always good to picturise. The lens’s job is to collect those light rays and make them converge onto the film or sensor at a single point so that we can reproduce the tip of that eyelash on our photograph exactly the same as it appears to our eye. If that light converges at a point before the sensor, that eyelash tip will appear blurry ! 

If you could not adjust the focus of the camera and lens, you would have to move physically closer or further from the object—just like you did with your magnifying glass and the sun. Luckily for us, most cameras do the moving for us.

Focusing happens either automatically or manually. Automatic focus, or autofocus, is when the camera system drives a motor to move elements in your lens to change focus. To focus manually, you need to turn a ring or similar mechanism on the lens instead. The standard formula for controlling depth of field is to control the f-stop of the lens. And that is true enough. A wide-open aperture results in a shallow range of focus, and a small aperture gives you lots of depth, with almost everything in focus.

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்ற  திருஷ்டாந்தமா !!  குழந்தைகள் தான் பல சமயங்களில் உலகத்தை சரியான பார்வையில் பார்க்கின்றனர்.  ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக  தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது தும்பிக்கையால் தள்ளி, காலால் மிதித்து விடும்' - வெம்புகரிக்கு ஆயிரம் முழம் என விளக்கம் கொடுத்தது !    தச்சன் குழந்தையிடம், “இது மரப் பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் சமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.

குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

இது உண்மையில் திருமூலரின் தத்துவ பாடல்.

மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

பொது விளக்கம்: பொது நிலையில் தனிப்பாடலாக பார்த்தால் அத்துவைதம் போலுள்ளது, இறைவனே உயிர்களாகவும் உலகமாகவும் மாறுகிறான், பின் உயிர்கள் தன்னிலை அறிந்ததும் இறைவனின் மீண்டும் சேர்ந்துவிட்டன என்பதைப் போல் மரத்தினிலிருந்து யானை சிலை வந்தது, பின் சிலையின் வடிவு கலைந்ததால் மீண்டும் மரத்தினைப் போல் மாறிவிட்டது. மரத்தினை பிரம்மாக கொண்டால் அதில் தோன்றிய உயிர்கள் மதயானைகள். பிரம்மம் அமைதியானது அதனால் அது மரமாகவும், இதில் உயிர்கள் ஆரவாரமிக்கது அதனால் மதயானையுடன் உவமையாக கூறினார். ஆன்மாவுடன் சத்தியின் நிலை எப்படிப்பட்டது என்பதனை விளக்கும் பகுதியாக அமைவதால் சித்தாந்தமாகிறது. திருமூலரின் முதல் பாடலில், "ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்" என்றார். ஒருவனே இறைவன், அவனே சிவமாகவும் சத்தியமாக இரண்டாக உள்ளான் அதில் சத்தியே இரண்டு அருளான மறக்கருணையும் அறக்கருணையும் செய்கிறது என்கிறார் திருமூலர். 


Hope this made an interesting post .. here are 2 photos taken from almost the same place with some lens adjustment – one focussing on the Rose buds, with Rose flower out-of-focus and the other focussing on the flower with buds out-of-focus. 

With regards – S. Sampathkumar
12th July 2021. 

No comments:

Post a Comment