ஸ்ரீபார்த்தசாரதியாக சேவை சாதிக்கும் கிருஷ்ண பகவானுக்கு மாடுகள் என்றால் கொள்ளை ஆசை. ஆவினத்திற்க்கு தம் சிறு கன்றுக்குட்டி மீது வாத்சல்யம். அவற்றை நாவினால் நக்கி, மெய் தீண்டி, தங்கள் அருகிலேயே வைத்து பார்துக்கொள்ளும்.
நேற்று (28.2.2022) கண்ணாடி பல்லக்கு புறப்பாடு சமயம் சற்று இருட்டு
! - மக்கள் நடமாட்டம் அதிகம், மேலும் பேண்ட் நாதஸ்வர - மக்கள் குரல் சத்தங்கள் வேறு
! .. .. பிறந்து சில நாட்களே ஆன தம் கன்றுக்குட்டியை
விட்டு அகலாமல், மற்றவர் அதன் அருகில் வாராமல் பாதுகாத்த தாய் பசு - திருவள்ளுவர் வாக்கில் :
மக்கள்மெய்
தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல்
இன்பம் செவிக்கு.
No comments:
Post a Comment