Pages

Friday, April 29, 2022

attractive eyes and a chittukuruvi

                   பறவைகள்  அழகானவை.  சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும்,  படபடவெனச் சிறகடித்துக் சுற்றி சுற்றி பறப்பதையும் கண்டு ஆனந்தம் அடைந்து இருப்போம்.
 
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியினைப் போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை; ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
 
 என்ற மஹாகவி பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம். பறவைகளின் சுதந்திரம் குறித்து பாரதியார் எழுதிய அந்த வரிகள் இன்றும்  காலம் கடந்து நிற்கிறது.  தமிழ் சினிமா பாடலில் புகழ் பெற்ற சிட்டுக்குருவி பாட்டு, எம். எஸ். ராஜேஸ்வரி  பாடிய (அஞ்சலிதேவி  நடித்த) சிட்டுகுருவி சிட்டுகுருவி சேதி தெரியுமா?..எனும் பாடல்.  சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?… இது - சவாலே சமாளி, 1971, பாடியது:  பி. சுசீலா, இசை: எம். எஸ் . விஸ்வநாதன். குருவி பாடல்கள் பல உள்ளன. 
 
சிட்டுக்குருவி (House sparrow), (Passer domesticus) என்பது  ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும்.  பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். 
 
குருவி இனமே அருகி விட்டது என சிலர் கூறினாலும், இன்னமும் பல கண்ணில் படுகின்றன.  இதோ திருவல்லிக்கேணியில் நான் எடுத்த ஒரு குருவி புகைப்படம் .. .. அந்த கண்களும் கவர்ச்சியாகவே படுகின்றன.
 
உங்கள்-  மாமண்டூர் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
29.4.2022

No comments:

Post a Comment