Search This Blog

Saturday, June 11, 2022

sending emissary !! - கிழக்கே போகும் ரயிலே.. தூது போவாயோ ?!?!

 கடைச் சங்கத் தொகை நூல்களுள் தலைமை சான்ற புறநானூற்றுள் பிசிராந்தையார் என்னும் பெருந்தமிழ்ப் புலவர் தம் ஆருயிர் நண்பனாகிய கோப்பெருஞ் சோழனுக்கு அன்னச்சேவலை அருந்தூது விடுத்ததாக நறுந்தமிழ்ப் பாடலொன்று உள்ளது. 


எவ்வளவு பிரயாணங்கள் செய்தாலும் அலுக்காதது இரயில் பயணம் .. .. .. உங்கள் மனதில் ஏதாவது இரயில் பயணம் உடனடியாக வருடுகிறதா ?  40 வருஷங்கள் கடந்து போனாலும், இரயிலை பார்த்தால் முணுமுணுக்கும் பாடல் இளயராஜா இசையில் கங்கை அமரனின் வரிகளில் - 'கிழக்கே போகும் ரயில்' பட பாடல்.  .. .. ஆம் என்றால் நீங்களும் 50 வயது கடந்தவர் !!   

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ !  .. ..

தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..

என்னென்னவோ என் நெஞ்சிலே

பட்டணம் போனா பார்ப்பாயா பார்த்தொரு சங்கதி கேட்பாயா

கிழக்கே போகும் ரயிலே.. நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ..  .......

 

அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. பல தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. இவ்வாறு தூது அனுப்பும் உத்தி நற்றிணை போன்ற சங்கப் பாடல்களிலும், பின்னர் வந்த இலக்கியங்களிலும் கூடக் காணப்பட்டவை. 



சொல்ல விரும்பும் ஒரு பொருளை கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன. ஆழ்வார் பாசுரங்களில் - கிளி, நாரை, செங்கால் நாரை, என பல புள்ளினங்களை எம்பெருமானிடத்தே தூது செல்ல பணிக்கப்படுகின்றன. 

தமிழில் தூது வகை இலக்கியங்களுள் ஒன்று அழகர் கிள்ளை விடு தூது. திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் - காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் கொண்ட நூல் இது.  

 

With regards – S. Sampathkumar

11.6.2022.

1 comment: