Pages

Monday, June 20, 2022

the captivating smile of ........

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே !!  (யாரவது உங்களை பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்) - தலை நரைத்து, வெண்தாடி கொண்ட என்னை பார்த்து சொல்லவில்லை - நான் சொன்னேன் !!

சிரிப்பு ஒரு சிறந்த மருந்து - கண்ணதாசன் வரிகளில் ஆண்டவன் கட்டளை படத்தில் ஓர் சிறந்த பாடல் : 

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது 

பல வருஷங்கள் முன்பு NS கிருஷ்ணன் TA மதுரம் சேர்ந்து பாடிய மருதகாசி இயற்றிய பாடல் :  

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே - நமது பொறுப்பு

கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் - கண்ணாடி சிரிப்பு - மனம்

இந்த பாடலில் மேலும் வரும் வரிகள் :

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே-  சொந்தமான கையிருப்பு - வேறு

ஜீவராசிகள் செய்ய முடியாத - செயலாகும் இந்த சிரிப்பு  

இந்த காட்டு கழுதை  சரியான போஸ் கொடுக்க கொஞ்சம் பிகு பண்ணியது !! என்னை படம் எடுத்து என்ன பண்ணப்போறே என்று வினவியது ?  -  ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே !!  என்றேன்.  மேலும் மக்கள், உன் படத்தை  'என்னைப்பார் யோகம் வரும்' என்ற வாசகங்களுடன் மாட்டி,  விழித்து எழுகிறார்கள் என்றேன் !!  


களுக் என்று ஆனந்தமாக பற்கள் பளீரென தெரிய,  சிரித்து  மயக்கினாள் அந்த அழகி! 

உங்களுக்கு பிடித்துள்ளதா !!!

20..06.2022 

No comments:

Post a Comment