Pages

Wednesday, July 6, 2022

buying groundnut !!

பச்சை வேர்க்கடலையும் .. .. ஆழாக்கும்.  ஆழாக்கு =  அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி) 


 முகத்தல் என்றால் : மொள்ளுதல்; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல்.  வேர்க்கடலை  மாவடு போன்றவற்றை படி (கால் படி; அரைப்படி; 1 படி) எனவும்; வேப்பம் பூ போன்றவற்றை ஆழாக்கு என்ற அளவையிலும் விற்றார்கள் - நாம் வாங்கினோம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம்.  

பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனவும் வழங்கப்பட்டது. முகத்தல் அளவை உங்களை கொஞ்சம் ஈர்த்து இருந்தால் :   படி - 4 படி கொண்டது, ஒரு மரக்கால். 6 மரக்கால் கொண்டது, ஒரு பறை.2 பறை கொண்டது, 1 கலம். 2 கலம் கொண்டது, 1 மூட்டை. 60 மரக்கால் கொண்டது, ஒரு உறை.  கிலோ கற்கள் போன்றவை வருமுன்னர்  காய்கறிகளை (பொருட்களை) எடை பார்க்க... கூழாங்கற்கள், நெல்மணிகள், குன்றிமணி, தெள்ளுக்காய், களர்ச்சிக்காய் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.   

No comments:

Post a Comment