Search This Blog

Sunday, December 11, 2022

Remembering Desiyakavi Mahakavi Subrahmanya Barathiyar – 140th Birthday

Remembering Desiyakavi Mahakavi Subrahmanya Barathiyar – 140th Birthday 

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;

அணிசெய் காவியம் ஆயிரங்கற்கினும்; ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்;

 11th Dec ~  மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரை நினைவு கூறும் இந்நாளில், நீங்கள் இந்த வரிகளை கேட்டதுண்டா ?  அற்புத கவி, தனது காலத்துக்கு முன்பே வருவன குறித்து தீர ஆலோசித்த தீர்க்கதரிசி  மகா ஞானி பாரதியார் தனது சுய சரிதையில் அன்றைய ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறை பற்றி  மனம் நொந்து கூறிய வார்த்தைகள் இவை.

 



Union Minister of Railways Ashwini Vaishnaw  has announced today of  a new train 'Kashi Tamil Sangamam Express' between Varanasi and  Tamil Nadu to commemorate the ongoing month-long Kashi Tamil Sangamam. "To commemorate this great journey and make it a permanent connection we will start Tamil Kashi Sangamam Express soon," said Vaishnaw while interacting with the guests from Tamil Nadu.  Well, Varanasi has connection with the man born on this day. 

 


Thiruvallikkeni ~ is the famed Divaydesam of Sri Parthasarathi.  It is also best known to be the place where Mahakavi lived – that was at Thulasinga Perumal Kovil Street ~ the entrance of Sri Azhagiya Singar sannathi on the western side of the temple. 

Mahakavi Subramanya Bharathi is not to be thought of in the same breadth of the so called poets of date who are mere vendors  or pleasure merchants seeking glory in tinseldom.  In Tamil literature from Sangam age, Bharathi is nonpareil.  His thoughts and words are far beyond the times that he lived in – a true visionary.  Through his compositions and speeches, he spurred the masses in support of the Indian Independence movement.  He was closely associated with great contemporaries like Sri Aurobindo, Bal Gangadhar Tilak, VVS Iyer, VO Chidambaram Pillai, Subramaniam Siva amongst others. 

Dec 11 – is to be eternally remembered for that iconoclastic freedom fighter - born in a small village called Ettayapuram on Dec 11' 1882 ~ the man who breathed freedom struggle.  He had a troubled existence, constantly chased by the British Govt,  was on the run – still his indomitable will and his concerted action mobilized masses, making them aware of the need for freedom in the Southern  India.

 


சுப்ரமணிய பாரதியார் ஒரு உன்னத பிறவி.   கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர்பத்திரிக்கை ஆசிரியர்சமூக சீர்திருத்தவாதி - தன்  காலத்துக்கு  மிகவும் பல்லாண்டுகள்  பிறகு நடக்க வல்லவை பற்றி  கூர் நோக்குடன் சிந்தித்தவர்.  குறைந்த காலமே வாழ்ந்தாலும் சாதனைகள் செய்தவர். இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன்எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் சுப்பிரமணிய பாரதியார்என அழைக்கப்பெற்றார்.

 

Mahakavi Subramanya Barathi…. the greatest of modern poets  acclaimed that ‘writing poems is his profession’ – but lived the life of fighting for independence.  He was proficient in Sanskrit, Telugu, English, and French. He wrote with felicity in English. The poet was closely associated with many Swadeshi leaders in the south, including V.O. Chidambaram Pillai. When the British Raj clamped down on the Swadeshis, he took refuge in Pondicherry in 1908; Aurobindo and V.V.S. Iyer also sought shelter there later. In 1920, Bharati returned to Madras to rejoin Swadesamitran. He met Mahatma Gandhi and wrote an oft-quoted poem in praise of non-violence. But his last years were tragic and he died in obscurity in September 1921.

In June 1897, at a very young age of 15 (customary those days) his  marriage took place, and his child-bride was Chellammal.  Bharathi left for Benaras (Kasi). He lived there the next two years with his aunt Kuppammal and her husband Krishna Sivan.  He learnt with flair and became expert in Sanskrit, Hindi and English, passing  with credit the Entrance Examination of the Allahabad University. The Benares  stay brought about a tremendous change in Bharathi’s personality.  His personality and looks too changed – he started sporting a twirled  moustache;  a  turban and acquired a bold swing in his walk.   Interestingly, this is what he claimed himself to be (at a much later stage !)

நமக்குத் தொழில்கவிதை,  நாட்டிற்கு உழைத்தல்*

இமைப் பொழுதுஞ் சோராதிருத்தல்- உமைக்கினிய

மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;

சிந்தையே! இன்மூன்றும் செய்.

He prayed Lord Siva (Umainathan) to bless the community stating that his avocation was ‘writing poetry, working for mother land and persevering without battling eye-lid for the cause’ – appeals blessing for these three !  

His poetry stands out for many facets of his love for his motherland. He berates his countrymen for many social evils. He chastises them for a fearful and pusillanimous attitude towards the rulers. He gave a clarion call for national unity, removal of casteism and the removal of oppression of women. He calls for the British to leave the motherland in forceful ways at one point saying "Even if Indians are divided, they are children of One Mother, where is the need for foreigners to interfere?".   

காசி பஞ்சகத்தில்,

‘காஸ்யாம் ஹி காஸதே காஸீ காஸீ ஸர்வப்ரகாஸிகா

ஸா காஸீ விதிதாயேன தேன ப்ராப்தா ஹி காஸிகா’

 

காசி என்றாலே எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மா !!   உள்ளிருக்கும் காசியை வெளியிலிருக்கும் காசியானது இந்த அஞ்ஞான மயமான மனதிற்கு காட்டிக் கொடுக்கிறது.  புனித வாரணாசியை ஞானத்தின் ஊற்று கொப்பளிக்கும் இடமாக  ஆதிசங்கரர் உணர்ந்தார். காசி க்ஷேத்ரத்தையே சரீரமாகக் கொண்டால், உபநிஷதம் கூறும் மகாவாக்கியப் பொருளை கூறியபடியே ஓடும் ஞானதாரையே கங்கை என்கிறார்  .. … …


மஹாகவி காசிக்கு வந்த சமயம் இனிதானதல்ல !!  1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே, அவர் அங்கே சென்றார்.

 

"இன்னது நீர்க்கங்கையாறு எங்கள் ஆறே

இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''

இது கங்கைக்குத் தங்கக் கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள். . காசி-கங்கை அவரின் உள்ளத்தில் உவகையையும் தெய்வீகத்தையும் வளர்த்தது. ஹிந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார்.  கங்கையின் பிரவாகத்தை விழிவிரிய பார்த்துக் கொண்டிருப்பார். சாதுக் களையும், விதம்விதமான மக்களையும் கவனித்துக் கொண்டே இருப்பார். பாரதியின் பாண்டியத்தை காசிப் பண்டிதர்கள் அப்போதே வியந்தனர். தன்னுடைய 16 வயதிலிருந்து 21 வயதுவரை அவர் காசிவாசியாக இருந்தார். கொஞ்சகாலம் பள்ளியொன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். பண்டிதர்களிடையே பாரதியார் எப்போதுமே தீவிரமாக விவாதிப்பாராம். பாரதியார் தன் உடையிலும், தோற்றத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொண்டது காசியால்தான். கங்கையின் கம்பீரமே அவரின் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.


TN BJP Sri K Annamalai and External affairs Minister Mr S Jaishankar at Kasi

a  kavignar competing in Barathi vizha today at Triplicane 

At Thiruvallikkeni, where Barathiyar lived – Vanavil Panpattu Maiyam is organizing a 2 day fete concluding day…  Remembering the great Poet Freedom fighter Mahakavi Subramanya Bharathiyar today.    

                                   

With great regards, admiration and love to Mahakavi
S. Sampathkumar
11.12.2022 

1 comment: