நடனம்
! நாட்டியம் !! 1980களில் மிக பிரபலமான படம் சலங்கை ஒலி - இளையராஜாவின் இன்னிசை பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள், பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும், வீடு பேறு பெறுமே
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்; பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
என்ற பாடலை பற்பல தடவை கேட்டு களித்து இருப்பீர்கள். நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'சதி' எனப்படும்.
நடனத்தை
ஆடுபவர்கள் பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும்சிறப்பாக ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான
சிவன், நடராசர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி
சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக
அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கொண்டதோர் கோலமாகிக் கோலக்காவுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்சமாகி உலகெலாமுய்ய வுண்டான்
எண்டிசையோருமேத்த நின்றவே கம்பன்றன்னைக்
கண்டு நானடிமை செய்வான் கருதியே
திரிகின்றேனே.
தான்
விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய்
, உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும்
போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன்
தலந்தொறும் அலைகின்றேன் . அவனே ஞானானந்த நடனம் புரிபவன் ; ஐந்தொழிற் கூத்தன்
. திருமுறையில் திருக்கூத்தன் என்றுள்ள இடந்தொறும்
மகேசுரமூர்த்தியாகிய நடராசர் என்பர் . உண்டது நஞ்சம் , அதனை உண்டதன் காரணம் உலகெலாம்
உய்தல் வேண்டுமென்று கொண்ட திருவுள்ளம் . திருவேகம்பனைக் கண்டு அடிமை செய்தற் பொருட்டாக
அவன் திருவடியே கருதித் தலந்தோறும் திரிகின்றேன் நான்!! நான்காம்
திருமுறை - திருநாவுக்கரசர் தேவாரம் பாசுரம்
படத்தில் கங்கைகொண்ட சோழபுரம் எனும் அற்புத இடத்தில் - சித்தரிக்கப்பட்டுள்ள சிவபெருமான் தாண்டவமும், கோவில் பிரகாரத்தில், ஏதோ விளம்பர படத்திற்க்காக நடனம் ஆடுவது போல அபிநயம் கட்டிய ஒரு சுந்தரியும் !!
ஒரு நல்ல
வெயில் தெறித்த மார்ச் மாத மத்தியானத்தில் எடுக்கப்பட்ட படங்கள்
அன்புடன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
31.3.2023
No comments:
Post a Comment