Pages

Wednesday, April 19, 2023

Calf is adorable !! - பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி!

மாடுகள் சிறப்பான அழகு கொண்டவை ! - பசு மாடு மிக அழகானது, அதிலும் கன்றுக்குட்டி மனசை கவரும். 

கங்கை அமரன் இயக்கத்தில் வெளி வந்த கிராமிய படம் - எங்க ஊரு பாட்டுக்காரன், தமிழ் திரையுலகை புரட்டி போட்டது.  மனோ, ராமராஜன், நிஷாந்தி அனைவருக்கும் மேலும் பல வாய்ப்புகளை பெற்று தந்தது.  அருமையான பாடல்கள்.  இசைஞானி இளயராஜாவின் உன்னத இசை மறுபடி மறுபடி கேட்க தூண்டியது.   இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. 

ராமராஜன் ஒரு நீல நிற அரைக்கால் ட்ராயர் அணிந்து - பசுமாட்டை தழுவி செண்பகமே, செண்பகமே என்று பாடினார். பலமிக்க காளையை ஒரு பாட்டு பாடி மண்டியிட வைத்தார்.

 


பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி!   பேச்சி பேச்சி நீ அருமை உள்ள பேச்சி !!

ஏழூரு சீமையிலும் உன் போல யாருமில்ல !!  எட்டாத ஊரில் எங்கும் உன் போல பேருமில்ல !!

எப்போதும் நன்றி உள்ள உன் போல ஜீவன் இல்ல !!

பாட்டுக்காரன் பாட்டு கோவிக்காமே கேட்டு வாடி வாடி என்னுடைய பேச்சி !!

 


இன்று திருவல்லிக்கேணியில் இந்த குழந்தை கன்றுக்குட்டியை, பாசத்துடனும், பரிவுடனும் - தன அன்பை வெளிப்படுத்தியபோது !!

 
With regards – S. Sampathkumar
19.4.2023
This is only a trailer, perhaps we would get to see a beautiful video of the same incident from ace !!! 

No comments:

Post a Comment