Pages

Tuesday, April 18, 2023

Mahadevi - if not, Maranadevi !!! - என்ன பார்வை உந்தன் பார்வை

மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரண தேவி .. .. உங்கள் நினைவு என்ன !!!

 


இந்த கூரிய  கொம்புகள் கொண்ட காளையை கண்டவுடன் கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னரின் இசையில் "காதலிக்க நேரமில்லை" பாடல் வரிகள் ஞாபகம் வந்தன.  என்ன பார்வை உந்தன் பார்வை  ~  எனை மறந்தேன் இந்த வேளை. 

ஏரு பூட்டுவோம் - நாளை  சோறு ஊட்டுவோம் -இந்த

ஏழைகளெல்லாம் ஒன்றாக சேர்ந்து

கொடியை நாட்டுவோம்- வெற்றி கொடியை நாட்டுவோம். 

ந்த பாடலை கேட்டு இருக்கீர்களா ?!?  -  உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். இந்த அற்புத பாடல் இடம் பெற்ற படம் "மகாதேவி"  1957ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி . இராமச்சந்திரன், சாவித்ரி  நடித்திருந்தனர். 

வில்லன்களுக்கு நட்சத்திர அந்தஸ்து அளித்தவர் பி.எஸ்.வீரப்பா.   அவரது தனித்தன்மையே அசலான உடல்மொழி, குரல் வளம், மற்றும் தமிழை மிகவும் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கும் பாங்கு. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த வில்லத்தனமான சிரிப்பு. வீரப்பாவின் முத்திரைச் சிரிப்பான உரத்த ஹா ஹா ஹா என்ற அதிரடி சிரிப்பு முதன்முதலில் வெளிப்பட்டது சக்ரவர்த்தி திருமகன் என்ற படத்தில். 

வீரப்பா பேசும் அனல் தெறிக்கும் வசனங்களும் அந்நாட்களில் மிகவும் பிரபலம். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில், வந்த  மகாதேவி என்ற படத்தில் வீரப்பா பேசிய வசனங்கள் காலம்கடந்தும் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்த ஒன்று. அப்படத்தில் நடிகை சாவித்திரியின் பெயர் மகாதேவி. வீரப்பா சாவித்ரியை காதல் பொங்க பார்க்கும் பார்வையும், ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி’   அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக மிக பிரபலம்.  இந்த வசனத்திற்கு கைதட்டல்களையும் விசில்களை பலத்த கரகோஷத்தையும் திரை அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். காதலிக்கும் இளைஞர்கள், தங்கள் காதலியின் பெயரை சேர்த்து ‘மணந்தால் ____ , இல்லையேல் மரணதேவி’ என்று கூறி மகிழ்வார்களாம்.

 
அன்புடன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
18.4.2023 

No comments:

Post a Comment