Search This Blog

Tuesday, May 16, 2023

beau Cat ! - மியாவ் மியாவ் பூனைக்குட்டி !

மியாவ் மியாவ் பூனைக்குட்டி !  வீட்டை சுத்தும் பூனைக்குட்டி !!

அத்தான் மனது வெல்லக்கட்டி ! அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி !!

குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்தது.  ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பல பாடல்கள் ஹிட்டானது.  எம். எஸ். இராஜேஸ்வரி  குரலில், மியாவ் மியாவ் பூனை குட்டி பாடல் பிரபலமானது.   இவர்தாம் - களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடியவர்.    நாயகன் படத்து  - நான் சிரித்தால் தீபாவளி, பாடலிலும் இவர் குரல் ஒலிக்கும்.



Do you like animals .. .. have any pets !  feed the stray ones regularly? Pets are a big part of life in many parts of the world, and a growing economy often means a growing pet population. Dogs and cats are the most popular pets. 

Cats have been a cinema staple for more than a century, dating all the way back to the 1901 silent short film The Sick Kitten. Sometimes they're cute, and sometimes they're creepy, but a film is almost always more interesting with a feline element.  The Sick Kitten is a 1903 British short silent comedy film, directed by George Albert Smith, featuring two young children tending to a sick kitten.

In those days itself, it was a remake of  Smith's earlier The Little Doctor (1901),  raved for the  editing technique that he first explored in his films of 1900: Grandma's Reading Glass and As Seen Through A Telescope.  It was all about ‘cut  from medium shot to close-up and back to medium shot’, though this time the close-up is presented in the same fashion as the others - i.e. without the circular black mask to differentiate it. Presumably, Smith believed that his audience would have grown more sophisticated and would be able to tell the difference between a medium shot and close-up without prompting.

In the kitten movie,   the children feed the kitten some medicine, they shake hands on completion and the little boy takes a bow, accentuated by his outlandish top hat.

 

மதிமேல் பூனை, ருசி கண்ட பூனை, பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என நினைக்குமாம்- என  பூனை  பற்றிய பழமொழிகள் சில உள்ளன.  சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றனவாம்.  பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை; ஆண் பூனைகள்  இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.  பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.

 

அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk).  இது பற்றி இரண்டு விதமான கருத்துகள் பரவி உள்ளன.  நல்லது ! கெட்டது !! 

 

ஒரு பூனையின் மியாவ் சப்தத்தை, நம்மால் ஒரு போதும் மனித வார்த்தைகளாக மாற்ற முடியாமல் போகலாம் என்று பூனை நடத்தை நிபுணரும், இது போன்ற செயலிகளின் மூலம் பூனைகளும் மனிதர்களும் ஒரு நாள் பேசலாம் என சிலரும் !!

 
Interesting !!
 
With regards – S. Sampathkumar
16.5.2023 

No comments:

Post a Comment