Search This Blog

Sunday, June 25, 2023

Avarice - wingspan !! - ஆசைகள் மனித இயல்பு ! - பேராசை !?!?

ஆசைகள் மனித இயல்பு ! - பேராசை அனைவரையும் அழிக்க வல்லது ! - உங்களின் ஆசையின் அளவுகோல் தான் என்ன !  - எவ்வளவு !! - ஒரு மனிதன் கூறினான் - அதிகமில்லை ஜென்டிலில்மன் - ஒரு பறவையின் இரு இறக்கைகளை இடைப்பட்ட தூரம்தான் !! 

Wingspan -  The lift from wings is proportional to their area, so the heavier the animal or aircraft the bigger that area must be. The area is the product of the span times the width (mean chord) of the wing, so either a long, narrow wing or a shorter, broader wing will support the same mass.

குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்

தினமும் மதி மயங்கும் பல எண்ணம் பல எண்ணம் 

குடும்பம் ஒரு கதம்பம் படத்தின் டைட்டில் சாங் கண்ணதாசன் இயற்றி MS விஸ்வநாதன் இசையமைத்து தானே பாடியது !  - அதில் கவரும் வரிகளின் ஒன்று :

"பொருளாதாரத்திலே பொருள்தானா தாரம் இன்று!!" 

Visu catapulted to fame with his strong dialogue delivery - Kudumbam Oru Kadambam ( Family is a Flower) based on Visu’s play was released in 1981,   directed by SP Muthuraman, starring  Pratap Pothen, Suhasini, Sumalatha, S. Ve. Shekher and Visu.  It was a big hit -   remade in Kannada as Ananda Sagara (1983),  in Telugu as Manishiko Charithra (1984),  in Hindi as Aaj Ka Daur (1985),  and in Malayalam as Oru Sandesam Koodi. 

புலன்களை தன் பிடியில் வைத்து இருக்க வேண்டிய மனிதன், புலன்களை மிகவும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்திருக்கிறான் தான், தனது, தனக்கானது, தனக்கு மட்டுமே ! என தாம் வாழும் இந்தப் புறவுலகம் உண்மை என்று எவ்வளவுதான் அவன் நினைத்தாலும், உண்மை பல சமயங்களில் உறுத்தவே செய்கிறது.   புலன்கள் நம்பத் தகுந்தவைதானா என்று எண்ண ஒரு நொடிநேரம்கூட அவகாசம் இல்லாத கணந்தோறும் ஏதாவது புலனின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதனுக்குக்கூட மரணம் வந்துவிடுகிறது. அப்போது அவனும் இது உண்மைதானா?  என்று அப்போது அனைவரும், அவனை தவிர அறிவார்கள். .  வரலாறு தோன்றிய ஆதி காலத்தில் இருந்து, மனித குளம் 'அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதை'  வழக்கமாகவே கொண்டுள்ளது.  

ஆசைப்படுத்தல் நியாயமானது !!  ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசம் தான் மிக பெரியது, பெரிய தீங்குகளை விளைவிக்கிறது.  அதிகமான பணத்தை விரும்புவது மட்டுமே  பேராசை அல்ல !  அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடலாம். எந்த விஷயமும், எந்த பொருள் மீதும், எவரிடத்தும், எங்கே எவ்வளவு பற்று வைக்க வேண்டுமோ, அதை தாண்ட கூடாது !    முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசை கூட தீங்கு விளைவிக்கும் பேராசைதான். 

செல்வம் ஈட்டுதல், பொருளாதாரம் மிகவும் முக்கியமானது; அதைவிட முக்கியமானவையும் உள்ளன. பொருளாதாரத்துக்காக அந்த முக்கியமானவைகளை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.  

Greed (or avarice) is an insatiable desire for material gain (be it food, money, land, or animate/inanimate possessions); or social value, such as status, or power. Greed has been identified as undesirable throughout known human history because it creates behavior-conflict between personal and social goals. What is ultimately real is not exhausted by either our inner psychological constitution or the externally perceived physical nature. Mostly, in an enthusiasm of empirical observation, people do not see anything beyond themselves and the world before them. All the business of life, the activity of people, and the manifold endeavours in which one engages seem to be covering only the outer shell of the substance of reality.

From the beginning of history, materialistic science, sociological programs and political organisations have been working in a hectic manner to make life secure and happy, and trying to increase the quantum of happiness to the maximum degree.  With all the efforts of man to make himself comfortable and secure in this world, he has remained insecure and uncomfortable, which is something which everyone has to appreciate for one's own self. 

You may chose to ignore all the above and wonder the flight of this beautiful bird – look at its wingspan !

 


The wingspan  of a bird or an airplane is the distance from one wingtip to the opposite wingtip. For example, the Boeing 777–200 has a wingspan of 60.93 metres (199 ft 11 in),[1] and a wandering albatross (Diomedea exulans) caught in 1965 had a wingspan of 3.63 metres (11 ft 11 in), the official record for a living bird.
 
Interesting !
 
With regards – S. Sampathkumar
25.6.2023 

No comments:

Post a Comment