Sunrise, birds and more - குயில் பாட்டு சொன்னதென்ன !!
Morning started with sighting of beautiful Sunrise, a Cuckoo (Koel) and a news item that read that KOEL’s revenue skyrockets above INR 1,000 crore milestone for third straight quarter !
இந்தியக் குயில் (Cuculus micropterus) தென்னாசிய நாடுகளில் காணப்படும் குயில் இனம். குயில்கள் கூடு கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை. இந்தியக் குயில் 33 சென்டி மீட்டர் வரை வளர்கிறது.
அதிகாலை வானத்தில் சூரியன் அக்னி தங்க பிழம்பாக மின்னி பாரதியாரின்
வார்த்தைகளை நினைவு கூர்ந்தது :
தங்கம்
உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
எங்கும்
பரப்பியதோர் இங்கிதமோ?
வைகறை வேளை. உலகைப் போர்த்திய இருள் மெல்ல மெல்ல கிழிகின்ற காலம். கதிரவன் தன்னுடைய ஆயிரம் செங்கதிர்க் கரங்களை அகல விரித்து இப்பாரின் மீது ஆடுகின்ற நேரம், அவனுடைய கோலக்கூத்திலே மெய்மறந்த மாக்கடல், தன் நீண்ட அலைக் கரங்களைக் கொட்டி ஆர்த்துப் பெரு முழக்கம் செய்கின்ற சிறுகாலைப் பொழுது, . "முத்தையாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே மஹாகவி சுப்ரஹ்மண்ய பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடைய பாடிய பாடல் - குயில்பாட்டு
மகாகவி பாரதி உன்னத கவிஞர்.
தன வாழ்நாட்களை விட மிக முன்னோக்கி சிந்தித்தவர். சுதந்திர உணர்வை பரப்பியவர். உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த பண்புகள், உயர்ந்த
செயல்கள் எல்லாம் செழித்தோங்கப் பாடிய உயர்ந்த கவிஞர். அவர் பாடிய பாடல்களுள் உணர்ச்சிச்
செல்வமும் கற்பனை மெருகும் இழைந்து விளங்கும் சிறு காவியம் 'குயில்பாட்டு'.
"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! பேசமுடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன் காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; !!
The KOEL reference is to - Kirloskar Oil Engines Limited, a renowned manufacturer of engines, agricultural equipment, and generator sets, achieving a remarkable feat in its financial performance. KOEL proudly announced that it has crossed the INR 1,000 crore revenue mark for the third consecutive quarter. The impressive accomplishment was revealed in the audited financial results for the fourth quarter and full year ended March 31, 2023.
When morning starts good, day is good ! – Good morning
With regards – S. Sampathkumar
1.6.2023
No comments:
Post a Comment