இவன் யார் என்று தெரிகிறதா ! - எந்த மாடு ! - எந்த கொம்பு ??
கொம்பு என்பது விலங்குகளின் தலையில் உள்ள கூரான ஒரு உறுப்பு. இதன் மையத்தில் உயிருள்ள எலும்பும் அதைச் சுற்றி
நகமியம் மற்றும் பிற புரதங்களாலான உறைகளைக் கொண்டுள்ளது. இந்த கொம்புகள் என்பவை மான் கொம்புகளிலிருந்து வேறுபட்டவை.
மான் கொம்புகள் நிரந்தரமாக இருப்பவை அல்ல அவை அவ்வப்போது விழுந்து முளைப்பவை. பிற பாலூட்டிகளுக்கு உள்ள கொம்புகள் நிரந்தரமானவை.
குதிரை கொம்பு என்றால் :
இயலாதது; சாத்தியமற்றது; என பொருள்.
குதிரைக்குக் கொம்பு கிடையாது. அது ஒரு கற்பனை. எந்த வகையிலும் சாத்தியமாகாத ஒன்றைக் குதிரைக் கொம்புடன்
ஒப்பிடுவதுண்டு.
கொம்பு சீவுதல்
கேள்விப்பட்டு இருப்பீர்கள் !! - சினமுண்டாக்குதல் அதாவது தேவையற்ற இடத்தில சினத்தை
அதிகரித்து ஆத்திரம் வருமாறு செய்தல். மாடுகளுக்கு
கொம்பு சீவி விடுவார்கள் - கூர்மை அழகு மட்டுமல்ல தாக்குதலில் அதிக காயத்தையும் ஏற்படுத்தும். சந்தைக்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவி அலங்கரித்து
கொண்டு வருவார்கள். ஈரோடு, கருங்கல்பாளையம்
மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழக அளவில் ஒட்டன்சத்திரம்,
திருச்செங்கோடு அருகே மோர்ப்பாளையம், போன்ற மாட்டு சந்தைகளில் - கத்தி, அரம், ரம்பம், கட்டிங் மிஷின் ஆகியவற்றை
உபயோகித்து மாடுகளின் கொம்புகளில் ஏற்கனவே பூசப்பட்டுள்ள பழைய பெயின்டை சுரண்டிவிட்டு, கொம்புகளை தேவைக்கேற்ப செதுக்கியும், நறுக்கியும்
அழகுபடுத்தி விலையை அதிகரிப்பார்கள். .
A horn is a permanent pointed projection on the head of animals that consists of a covering of
keratin and other proteins surrounding a core of live bone. Horns are distinct
from antlers, which are not permanent. One pair of horns is usual; however, two
or more pairs occur in a few wild species and in some domesticated breeds of
sheep. Horns usually have a curved or spiral shape, often with ridges or
fluting. Horns start to grow soon after birth and continue to grow throughout
the life of the animal. The horns grow
gradually. They start out delicately when the calf is three months old and
already eating grass and hay. The horns are often beautifully formed, curved
more strongly as the cow grows older, the sharp pointer is often the oldest part
of the horn.
While horns are sometimes linked with digestion, body
temperature regulation, and breathing, their primary function in cows is
defence against predators. That's because cows are prey animals and had only
their horns to protect themselves, their calves, and other cattle in their herd
before they were domesticated.
Horn consists of two distinct parts: a short inner core of
living bone and an outer covering of horn.
This outer covering is made of keratin (the same material as our nails
and hair) and is more or less hollow except for the very tip. Cow horn has
thermoplastic properties, which means it can be softened and made malleable by
heating.
With regards – S. Sampathkumar
13.8.2023
No comments:
Post a Comment