Pages

Wednesday, August 30, 2023

How big is your ego !? - நான் யார் தெரியுமா !

How big is your ego ?  -  do you know ‘Who I am’ ?!?!?!? 

            நான் யார் தெரியுமா !  - பல மனிதர்கள், அகங்காரத்துடனும் ஆணவத்துடனும் ஆத்திரம் கொப்பளிக்க கேட்கும் கேள்வி !? 

ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்க்கையில் உண்டு உறங்கும்  போது தன்னைப் பற்றிய நினைவு இருப்பதில்லை, ஆழ்ந்த உறக்கத்தில் மறந்தும் விழித்த பின் "நான்" "எனது" உணர்வு உதிக்கிறது. உறங்கும் போது "நான்" என்கிற உணர்வு எங்கே போகிறது. ஆனால்  தான் பிறர் முன்னிலையில் பெரியவர் என்று காட்டிக்கொள்ள கேட்கும் கேள்வி, வெளிப்படும் மனோநிலை தான் -  "நான் யார்" ?  

1968 ஆம் ஆண்டு வெளிவந்த கே. சங்கர் இயக்கத்தில் ,    எம். ஜி. ஆர், ஜெயலலிதா, எல். விஜயலட்சுமி நடித்த  தமிழ்த் திரைப்படம் குடியிருந்த கோயில் .  இப்படத்தில் MS விஸ்வநாதன் இசையில்,TM  சௌந்தரராஜன் குரலில்,  புலமைப்பித்தன் வரிகளில் பிரபலமான பாடல் :  

நான் யார், நான் யார், நீ யார் ??

நாலும்  தெரிந்தவர்  யார் யார்

அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார் தடுப்பார் - யார் யாரோ

எடுப்பார் சிரிப்பார், இழப்பார் அழுவார், எதிர்ப்பார் யார் யாரோ

 

நான் யார்? என்பது  இரமண மகரிசி வழங்கிய உபதேசம் ஆகும். இந்த உபதேசம் குறித்த தன்னிலை விளக்கம் நான் யார் என்ற நூலாக வெளியிடப்பட்டது. தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்ற அழிவில்லாத நித்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே பயன் என தமது திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ள  உண்மையை விளக்கும் விளக்கவுரையே நான் யார்!  தேகம் நான் என்கிற எண்ண வலையைத் தாண்டி ஆத்ம சொரூபமே நான்என்னும் இறுதிப்பாடு வருவதுதான் ஞானம்

 


எது எவ்வாறு ஆயினும், தெரியாத இடத்தில், தெரியாதவர்களிடம் - நான் யார் என்ற கேள்வி எந்த பயனும் தராது !! 

Life is short, live it simple ! – shed your ego ! – no point in putting Qs to others – answers mostly lie with us .. .. live happy – make others smile !! 

ஆசாமி சிரிப்பு சிந்தனையாளனின் இன்றைய முத்து

 
With regards – S. Sampathkumar
30.8.2023
  

No comments:

Post a Comment