Pages

Thursday, September 7, 2023

White Rose ! - இனியவை கூறல் நன்று.

பூக்கள் அழகானவை.  மிக சில காலமே தாம் வாழும் போதும் நறுமணத்தையும் இன்ப உணர்வையையும் பரப்புகின்றன. வாழ்வு நிலையற்றது !  முகநூல் போன்ற தளங்கள் பொழுது போக்கவே !  - இங்கும் எங்கும் மன வெறுப்புகளை கொட்டி, வசைபாடி வாழாமல் இனியவை கூறல் நன்று.  ஒருவர் வாயிலிருந்தும் எழுத்து வடிவமாகவும்  வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.  பரபரப்புக்காக அர்த்தமற்ற, பிறரை வருத்தும் கடின சொற்கள் பேசுவோரை புறந்தள்ளுதல் நலம். 

செந்நாப்போதார் அறந்தகை திருவள்ளுவரின் வாய்மொழி :    

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.  

நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும்,மட்டுமே கூறி வருவோர்க்கு  பாவங்கள் தேய்ந்து போகும் , அறம் வளர்ந்து பெருகும்; வாழ்க்கை இனிமையாக இருக்கும். 

 

உலகம் பயனுற இனிமையாக வாழ விழையும் சிரிப்பு சிந்தனையானின் இன்றைய படம்
 
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
7.9.2023 

No comments:

Post a Comment