Pages

Monday, October 9, 2023

Arachis hypogaea, - simply வேர்க்கடலை

How fond are you of -  Arachis hypogaea, (அராச்சிஸ் ஹைபோகேயா  !!)-  a type of legume that belongs to the family Fabaceae, which also includes peas, lentils, and beans. 

Don’t get carried away – it simply is வேர்க்கடலை  - Peanuts are not true nuts, despite the fact that they are commonly treated and prepared like other nut species.  Peanuts are  healthful snacks, they   have many of the same benefits that  more expensive nuts provide. When compared to other nuts, peanuts fare exceptionally well nutritionally. They include a lot of beneficial nutrients and are a great way to get your daily dose of fibre, protein, and other plant-based nutrients.  

 


முன்னொரு காலத்தில் நம்ம ultimate luxury  - கங்கைகொண்டான் மண்டபத்தின் எதிரில் இருந்த வறுத்த வேர்க்கடலை நிலையம் !  - இங்கே சுடசுட வேர்க்கடலை, உப்பு கடலை, பட்டாணி உடைச்ச கடலை, அவல், அரிசி பொரி - இவற்றை பேப்பரை அழகாக ஓர் கோன் அமைப்பில் சுருட்டி மடித்து தருவார்கள் - நண்பர்கள் அனைவருடன் பகிர்ந்து உண்போம்.  

ஆண்டின் எல்லா நேரத்திலும் கிடைக்க கூடிய ஒரு  ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்  வேர்க்கடலை. மழைக்காலத்தில்  வேர்க்கடலை + இஞ்சி டீ  அமிர்தம்.  சாலையோர வியாபாரிகள் விற்கும் வேகவைத்த அல்லது வறுத்த மொறுமொறுப்பான வேர்க்கடலை   வெகுவாக ஈர்க்கிறது. 

வேர்க்கடலையானது மினரல்ஸ், வைட்டமின்கள், புரதம், ஒமேகா -3, ஒமேகா -6, நார்ச்சத்து, தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஈ, தயாமின், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் என பல ஊட்டசத்துக்கள் கொண்டது. .   வேர்க்கடலையில் நிறைந்திருக்கும் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.  வேர்க்கடலையில் அடங்கி இருக்கும் ஒலிக் ஆசிட் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள டிரிப்டோபான் எனப்படும் அமினோ ஆசிட் செரோடோனின் என்ற பிரெயின் கெமிக்கலை வெளியிட உதவுகிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்க உதவுகிறது. 

இவ்வளவு போதாதா !  கடலை போடுவதற்கு !!  - do note the digital payment acceptance. 

Words of wisdom from  Aasami Sirippu Sinthanaiyaan

 
With regards – S. Sampathkumar
9th Oct  2o23  

No comments:

Post a Comment