Pages

Monday, October 2, 2023

flying House sparrow ! - என் ஜோடி மஞ்ச குருவி !

பறவைகள்  அழகானவை.  சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவி (House sparrow), (Passer domesticus) என்பது  ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும்.  பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும்.  அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும்,  படபடவெனச் சிறகடித்துக் சுற்றி சுற்றி பறப்பதையும் கண்டு ஆனந்தம் அடைந்து இருப்போம்.

 


விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியினைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை; ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை 

 என்ற மஹாகவி பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம்.  

அரேபிய மொழியில் !!!  விக்ரம் படத்தில் SPB, சித்ரா, ஷைலஜா குரல்களில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், வாலி வரிகளில் 1986ல் வெளிவந்த இந்த பிரபல பாடல் மனதில் ஞாபகம் வருகிறதா !!

என் ஜோடி மஞ்ச குருவி !  சாஞ்சாடு நெஞ்ச தழுவி

ஆட்டம் போடடி !!  ஓ ஓ  பாட்டுப் பாடடி

சூடான பொட்டல் காடு!  ஜோராக கத்திப் பாடு

ஒன்னப் பாரு, மண்ணப் பாரு;   பொன்னப் போல மின்னும் பாரு...

 

Picture of a Sparrow taken at Triplicane with Nikon d7500 fitted with Nikkor ED 300mm lens

 
With regards – S Sampathkumar
2.10.2023 

No comments:

Post a Comment