Pages

Sunday, October 1, 2023

Two Parrots - one head !! नयन नयन मिल देखते, - ஈருடல் ஓருயிர்!!

A picture of two Parrots seemingly having one head !! – and would this trigger some love dialogues in you !?! 



नयन नयन मिल देखते, यदि होता है योग ।

वचनों का मूँह से कहे, है नहिं कुछ उपयोग ॥

(wonder what this is ?) 

பழைய சினிமா படங்களில் காதலர்கள் பேசும் cliche டயலாக் அன்பே !  நாம் ஈருடல் ஓருயிர்!!  

இது ஏதோ சினிமா வசனகர்தாக்கள் ஏற்படுத்தியது அன்று.  அகவிலக்கியத்தில் குறிஞ்சித்திணையில் கூறப்பெற்ற ஒழுக்கம் நடைபெறக் கூடிய இடம் மலையும் மலைசார்ந்த இடமும். தலைவனும் தலைவியும் சந்திப்பதும், கூடுவதும், இதனுடன் தொடர்புடைய செய்திகளும் குறிஞ்சித்திணைப் பாடலில் இடம் பெறும்.  திருவள்ளுவரின் வாய்ச்சொல் ஒன்று இங்கே : 

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல !!

– the one at the start is the Hindi translation of this Thirukkural. 

அன்பு வயப்பட்ட இரண்டு உள்ளங்கள், ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன !!  -  ஆனால் இது போன்ற மனித காதல்கள் பெரும்பாலும் நிலையற்றன !! காதலில் விழுந்தோரின்  உறுதி எல்லாம் குலைந்து விட்டது போன்ற ஒரு குறிப்பு நற்றிணையில் வருகிறது :    

வாடாப் பூவின் பொய்கை நாப்பன் - ஓடுமீன் வழியில் கெடுவ . . . . . 

 வாடாத தாமரை போன்ற மலர்களை உடைய குளத்தின் நடுவே மீன்கள் ஓடும் பொழுது உண்டாகின்ற வழியைப் போல அழியத்தக்கது இது !!

 
With regards – S Sampathkumar
1.10.2o23 

No comments:

Post a Comment