Pages

Tuesday, December 5, 2023

முள்ளும் அணிலும் ! - “ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி”

 

முள்ளும் அணிலும்

நான்  நடந்த பாதையிலே - கல்லும் உண்டு முள்ளும் உண்டு

உமாசந்திரன்  என்று ஒரு தமிழ் எழுத்தாளர் இருந்தார் !  அவர் ஒரு பெண் என எண்ணி இருந்தேன்.  இவர் யார் தெரியுமா ?

Likely that you have heard / read so much about the cyclone ‘Michaung’ – that you need a break !!  - not necessarily a thorny one !!



ரோஜா பூக்களில் மட்டுமல்ல ! கரடு முரடான பாதையிலும் முட்கள் உண்டு !  வெற்றி பெற்றோர் முட்கள் நிறைந்த பாதையை கடந்து வந்தவர்கள் தான்.  இந்த அணில் முட்கம்பி தனை பொருட்படுத்தாமல், “ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி”  என்று சொல்கிறதோ !!  

ரஜினிகாந்துக்கு ஆரம்ப நாளில் பிரமாதமான பெயர் வாங்கி தந்த படம் - ' முள்ளும் மலரும்'   ..   கே மகேந்திரனின் இயக்கத்தில்,   ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடிக்க, ஒளிப்பதிவு  பாலுமகேந்திரா, இசை இசைஞானி இளையராஜா. 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா! இன்றும் இனிக்கும் பாடல்.

கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் இதே பெயரில்  எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதாம் இப்படம்.   இவரது இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் இவரது சொந்த ஊர். அவ்வூரிலுள்ள சிவன் கோவிலுள்ள பூர்ணகிருபேசுவரைப் போற்றி இவர்  ஆண்கள் பெயருக்கு முன்னால் பூர்ணம் என்னும் அடைமொழியை இணைப்பது வழக்கம்.

உமாசந்திரன் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார்  எனினும்,  முள்ளும் மலரும் கதையை நாவலாக எழுதி, அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டதில்,  அவர் மிக பிரபலமானார்.   ’கெட்டபய சார் காளி... ரெண்டு காலு ரெண்டு கையி இல்லாட்டியும் கூட பொழச்சுக்குவான்’ என்பது படம் ரீலிசான சமயத்தில் பஞ்ச் வசனமாகப் பார்க்கப்படவில்லை;  படம் வெளியாகி, பல வருடங்கள் பின்னர்  இன்றைக்கு இது பிரபலமான பஞ்ச் வசனம்.  இவரது தம்பிகளில் ஒருவர் -   பூர்ணம் விசுவநாதன் !!

 
ஆசாமி சிரிப்பு சிந்தனையானின் பொழுதுபோக்கு சிந்தனைகள்
 5.12.2023  

 

No comments:

Post a Comment