Search This Blog

Tuesday, December 5, 2023

Cyclone Michaung fills up Triplicane Kairavini Thirukkulam 2023

சென்னை மாநகரம் வருடம் முழுவதும் தண்ணீர் இல்லையே என்று ஏங்கும் !  நவம்பர் / டிசம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு புயல் தாக்கும்போது, மழை கொட்டோகொட்டு என்று கொட்டி தீர்த்து பல இடங்களில் தண்ணீர் தங்கி - அதிக தண்ணீர் என கஷ்டப்படும்.  இவ்வருஷம் இவ்வமயம்  மக்கள் அதிகம் கூறிய வார்த்தை 'மிக்ஜாம்'   !! 

வங்கக்கடலில் உருவாகி  சென்னையை மிரட்டியெடுத்த மிக்ஜாம் புயல், தற்போது சென்னையிலிருந்து 200 கி.மீ தூரம் அளவுக்கு விலகிச் சென்று, ஆந்திராவின் நெல்லூருக்கு 50 கி.மீ தொலைவில் இருக்கிறது. மணிக்கு 7 கி.மீ வேகத்தில் தற்போது மிக்ஜாம் புயல் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று மதியத்துக்குள் புயல் கரையைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சென்னையை விட்டு விலகியதால், மாவட்டத்தில் மழை ஓய்ந்திருக்கிறது. இப்புயலால் உருவான கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கப்லபட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். 





இந்த புயலுக்கு மியான்மர் நாடு, Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) என்று பெயர் சூட்டி இருந்தது. மிக்ஜாம் என்றால் வலிமை, மீள்தன்மை, விரியும் திறன், சக்திவாய்ந்த  போன்ற அர்த்தங்களை குறிக்கிறது.  புயல் மழை, நீர் சூழல், மின்சாரமின்மை நடுவே, சென்னை பெருங்களத்தூரில் சாலையில் முதலை நடந்து சென்ற வீடியோ வெளியான நிலையில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குள் மக்கள் இறங்க வேண்டாம் என்று வனத்துறை அலுவலர்கல் எச்சரித்துள்ளனர்.  அந்தப் பகுதிக்கு வனத்துறை ஊழியர்கள் அனுப்பப்பட்டு முதலை தென்பட்டால் அது மீட்கப்பட்டு கொண்டு செல்லப்படும் என்று ஒரு அதிகாரி  தெரிவித்தார்.  

தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு  ”சென்னை நீர்நிலைகளில் சில முதலைகள் உண்டு. இப்போது புயல் மழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் இந்த முதலை வெளியே வந்திருக்கலாம். பொதுமக்கள் யாரும் அதைச் சீண்டி துன்புறுத்தாத வரையில் அதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றார் !!! 

கிராமங்களில் உள்ள மக்கள் பாசனத்திற்காகவும், நகரவாசிகள்   குடிநீருக்காகவும்   பருவ மழையை நம்பி இருக்கின்றனர். அப்பருவமழை வைகாசி, ஆனி (ஜூன்) மாதங்கள் முதல் ஆவணி, புரட்டாசி (செப்டம்பர்) மாதங்கள் வரை தென்மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் புரட்டாசி, ஐப்பசி (அக்டோபர்) மாதங்கள் முதல் கார்த்திகை, மார்கழி (டிசம்பர்) மாதங்கள் வரை வடகிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் கிடைக்கிறது. அம்மழை எல்லா இடங்களிலும் பெய்வதில்லை. ஓர் இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் பொழிகிறது. சில நேரங்களில் பெய்யாமலும் இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும்போதுதான் பஞ்சம் ஏற்படுகிறது. அத்தகைய பஞ்சத்தைத் தீர்க்க பண்டை மக்கள்  மழைநீரினை வீணாக்காமல் சேகரிக்கும் முறையினைப் பின்பற்றினர். 

பொழிகின்ற மழைநீர் ஓடைகள் பலவாகப் பிரிந்து ஆற்றில் சேர்கிறது. பெருக்கெடுத்து ஆற்றுநீர் ஓடுமிடங்களில் முன்னோர்கள் அணைகளைக் கட்டித் தடுத்து நிறுத்தினர். அணைகளில் வழிந்த நீரை ஏரி, குளம் முதலான நீர்நிலைகளில் நிரப்பினர். ஏரிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. ஓர் ஏரி நிரம்பிய பின் அதன் உபரிநீர் அடுத்த ஏரிக்குச் சென்றது. இவ்வாறு மழை நீரானது வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தேக்கி வைக்கப்பட்டது. எல்லா நீர்நிலைகளும் நிரம்பிய பின் எஞ்சிய நீரே கடலில் கலந்தது. 





குளம், ஏரி முதலான நீர்நிலைகளில் அவர்கள் நீர் சேமித்தது போல ஊருணி என்னும் நீர்நிலையிலும் நீரினைச் சேமித்தனர். அந்த நீர்நிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். அந்நீர்நிலையை உலகப் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு அழகாக உரை அளித்த   மணக்குடவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உண்கின்ற கேணி” (திருக்குறள்.215, மணக்குடவர் உரை) எனும் பொருளில் உரைதுள்ளார். 

ஒப்புரவு என்பது ஓர் அதிகாரம்.  ஒப்புரவு என்பதற்கு பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம், இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல், ஒத்துப்போகும் மெல்லியல்பு என அகராதி உரைக்கின்றது.  ஊருணி  - ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை; ஊரையடுத்த குளம்; ஊரார் நீர் முகக்கும் குளம்;  உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்  என்கிறார் செந்நாப்போதார் திருவள்ளுவர்.  உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பெரிய அறிவு படைத்தவனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாக பயன்படுவது போலாகும்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு. 

ஊருணி இருப்பது என்பதற்காக மழைப்பெய்யவில்லை. ஊருணி இயற்க்கையின் கொடையை சேமித்து வைத்துள்ளது. அது போல ஒருவர் நன்கு படித்து, நல்ல அறிவு படைத்த நற்பண்பாளர்களின் அறிவுச் செல்வம் பொதுவானது. அதனை பிறர்க்கு பயன்படும் வண்ணம் பகிர்ந்தளிப்பதே அறமாகும். அதே போல பொருட்செல்வமும் பலரின் உழைப்பால் குவிந்தவை. அவற்றையும்  பகிர்ந்தளிப்பதே அறமாகும்.  நீர் என்பது அத்தியாவசிய தேவை. ஒரு ஒப்புரவாளன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கொடுக்கிறவனாக இருக்க வேண்டும்.  

Thiruvalluvar says that the wealth and knowledge of a man who is truly wise is as beneficial to the society as the water that fills the general pond of village that provides good water to all people.  

In the divyadesam of Thiruvallikkeni, the tamil month of Masi has special significance. On the Full moon [Pournami day and Magam Nakshathiram] Sri Parthasarathi  Swami visits the shores of Marina, famously known as Masi Magam.   On Masi New moon [Amavasyai] starts the float festival at Thiruvallikkeni.   The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is  ‘Kairavini Pushkarini’… the pond of Lily – ‘allikkeni’ from which the place itself derives its name (~ and my blog is titled Kairavini Karaiyinile  literally meaning on the banks of holy Kairavini, the temple  tank) 

திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது  திருக்கோவில் குளம் - கைரவிணி  புஷ்கரிணி.    நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது.  இதன் மையத்தில் சிறிய அழகான 'நீராழி மண்டபம்' உள்ளது.  தண்ணீர் தளும்பும் நாட்களில் இதனுடைய கீழ் படிக்கட்டுகள் தெரியாது.   இந்த மண்டபத்தின் மேல்பாகத்தில் விமானம் உள்ளது.  நீர் நிலையில் நீரின் உயரம் அதிகமான பகுதியில் ('ஆழ்'எனப்படும்) மண்டபம் இருப்பதால் 'நீராழி மண்டபம்' எனப்படுகிறதாம்.  

சமீபத்திய மழையில், திருக்கோவில் மற்றும் மாட வீதிகளில் இருந்து வரும் நீரினால் திருக்குளம் நிறைந்து, நீராழி மண்டப படிக்கட்டுகள் மூழ்கி, இன்னமும் மூன்று அல்லது நான்கு படிக்கட்டுகள் நிரம்பினால், குளத்து நீர் வெளியே கூட வந்து விடலாம் என்ற அளவு நிறைய தண்ணீர் நிரம்பி, நிறைவாக, அழகாக காட்சி அளிக்கிறது.

 
இன்று 5.12.2023 காலை எடுத்த படங்கள் சில இங்கே.
 
With regards – S Sampathkumar
5.12.2023
PS :  the first six photos were taken at various dates in earlier years – the last 6 are the ones taken this day. 







No comments:

Post a Comment