கொக்கு
பாட்டு
இதோ
இங்கே ஒரு கொக்கு சிறகு விரித்து பறக்கும் படம்.
Egrets ! (கொக்கு) are
herons, generally long-legged wading birds, that have white or buff plumage,
developing fine plumes (usually milky white) during the breeding season.
முத்து
படம் நன்றாக ஓடி ரஜினி - மீனா மற்றும் அப்படத்தில் சம்பந்தப்பட்டிருந்த அனைவருக்கும்
பெயரையும் பணத்தையும் வாரி தந்தது. அந்த படத்தில்
ஒரு கன்னா பின்னா பாடல் :
கொக்கு சைவக் கொக்கு - ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் தான் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு - அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
இந்த பாடலை பரவை முனியம்மா பாட மறுத்ததாகவும், தேனி குஞ்சரம்மாள் பாடியதாகவும் ஓர் செய்தி !!
சில நூற்றாண்டுகள் முன்னர் காளமேகப்புலவர் என்றொரு அற்புத கவி இருந்தார். வைணவ சமயத்து பிராம்மணரான இவரது இயற் பெயர் வரதன். திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் மையல் கொண்டு, மோகனாங்கி சார்ந்திருந்த சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவராக திகழ்ந்து விளங்கினார். இவர் தம் சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் மிக பிரசித்தம். ஒரு சமயம் இவரை போட்டியாக - ககர வருக்கப் பாடல் கேட்டு - ஆசுகவியாக அவர் உடனடியாக தந்த பாடல். :
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
இரவில்
காக்கையால் கூகையை (ஆந்தையை) வெல்ல இயலாது. ஆனால்
அதே ஆந்தையால், பகலில் காக்கையை வெல்ல முடியாது. மன்னனானவன் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றுவதற்கு; கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க
வேண்டும்.
Interesting !
With regards – S Sampathkumar
23.12.2023
No comments:
Post a Comment