மறைந்து இருந்தே பார்க்கும் மருமம் என்ன !
What attracts you most ! – the green leaves or what is hidden behind !?!
பரந்த கிளைகளுடன் பட்டை சாம்பல் நிறத்தில் காணப்படும் இம்மரத்தின் இலைகள் மெல்லியவை, நுனி வால்போல் நீண்டு - ஆரம்ப காலத்தில் இளந்தளிர்கள் சிவப்பாக இருக்கும். இலைக்காம்பு நீளமானது. இந்தியா முழுவதும் இயற்கையாகவும், வளர்க்கப்பட்டும், சாலையோரங்களில் நிழல் தரும் மரமாகவும், ஆற்றங்கரையில் வழிபடுவதற்காகவும் இது வளர்க்கப்படுகின்றது. விரைவாக வளரக்கூடியது. விதைகள், போத்துகள் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படுகின்றது. எல்லா மரங்களுக்கும் தலைமையானதாகக் கருதப்படுவதால் இதற்கு அரசு என்று பெயர் ஏற்பட்டது. இதன் காய்ந்த குச்சியைக் கொண்டு யாகம் வளர்க்கின்றனர்.
மரங்களின்
அரசன் அரச மரம். பௌத்தர்களுக்கும் புனித மரம்.
புத்தபிரான் ஞானம் பெற்ற போதிமரம் என்பது
அரச மரம்தான். 'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத்
தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச்
செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும்.
7.12.2023
No comments:
Post a Comment