Pages

Sunday, March 17, 2024

the tongue of a Crow

Crows are commonly seen ! – how much do you like them – not sure whether you would relish these photos ! 

ஒரு விடுமுறை நாள் :  ஞாயிறு ...சற்றே !!  சோம்பேறித்தனமாக துவங்கியது .. .. தூக்க கலக்கத்தில் மாடியில் கண்டது காக்கை  - ஒன்று தன் குஞ்சிற்கு சாதம் ஊட்டியது, மற்றொன்று வாயை மிக அகலமாக திறந்து நன் நாக்கையையும் காட்டியது.  கிளிகள், புறாக்கள், குயில்கள், மைனாக்கள், குருவிகள் என பறவைகளை விரும்பும் மனிதர்கள் ஏனோ கரிய நிற காக்கையை விரும்புவதில்லை. 

பராசக்தி திரை படத்தில் ஆர். சுதர்சனம் இசையமைப்பில் உடுமலை நாராயணகவி எழுதிய காக்காய் பற்றிய பாடல்   சிதம்பரம் ஜெயராமன் பாடி சிவாஜி கணேசனின் நடிப்பில் பிரசித்தி பெற்ற பாடலை கேட்டு இருப்பீர்கள்.

 


கா கா கா கா கா கா

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க என்ற

அனுபவப் பொருள் விளங்க – அந்த அனுபவப் பொருள் விளங்க – காக்கை

அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க

 

உங்களுக்கு காக்கா பிடிக்குமா அல்லது காக்காய் பிடிக்க தெரியுமா ?  தம் வேலையை சாதித்துக்கொள்ள,  ஒருவரை (பல சமயங்களில் மேலாளரை)  அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைக் காக்கை பிடித்தல்  என்பர். காகம் அல்லது காக்கை (உயிரியல் வகைப்பாடு: Corvus) என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை - கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் 'கார்வுச்' என்ற சொல்லுக்கு 'பெரிய உடலமைப்பு கொண்டவை' என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன.  காக்கையின் அழைப்பைக் கரைதல் என்பர்.  

மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும்.

 


கரிநாக்கு என்று  சொல்வதை  கேட்டு இருப்பீர்கள்.  இது கரிய நிறம் நாக்கு அல்ல, கரிநாக்கைக் கொண்டவர்கள் வாயில் நல்லதே வராது;   தீயசொற்கள் சொன்னால் அது பலித்துவிடும் என ஒரு பயம் கலந்த நம்பிக்கை.  மனிதனுடைய நாக்கானது அற்புதமாக மொழிகளை பேச வல்லது.  ஒரு சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதால் எவ்வளவோ தீமைகள் நிகழ்ந்துள்ளன. குடும்பங்கள், உறவுகள் பிரிந்துள்ள.  திருவள்ளுவர் நாவடக்கம் வேண்டும் என்று தனது திருக்குறளில் அறிவுறுத்தியுள்ளார்.  

காக்கை பாடினியார் நச்செள்ளையார் கடைச்சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 12 உள்ளன.  இவரின் பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.  பதிற்றுப்பத்து ஆறாம்பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய 10 பாடல்கள், இவர் பாடியவை. நச்செள்ளை என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இப்பெயரில் பலர் இருந்த காரணத்தால் காக்கையைப் பாடிய இவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப்பெற்றுள்ளார். குறுந்தொகையில் இவர் தம் பாடல் ஒன்றில் 'விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிட்டுள்ளமையால் இவரைக் காக்கை பாடினியார் என்று குறிப்பிட்டுள்ளனர். காக்கைக்கு உணவிடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதற்கு இப்பாடல் சான்று. அக்காக்கைக்கு வைக்கப்படும் சோறு ‘பலி’ எனக்குறிக்கப்பெற்றுள்ளது. காக்கை கத்தும் ஒலியைக் கரைதல் என்றும் இப்பாடல் குறிப்பிடுகிறது. 

Interesting !
 
With regards – S Sampathkumar
17.3.2o24

2 comments:

  1. தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு...உங்களது பதிவுகள் இந்தக் குறளுக்கு பொருத்தமாக இருக்கிறது...தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. Thank you so much - would have been happier knowing the person who wrote this comment !!

    ReplyDelete