Search This Blog

Monday, April 1, 2024

village greenery ! Tree

 

கிராமங்கள் அழகானவை ! - பச்சைப்பசேல் என்ற வயல்வெளி - அதிலே விளையும் பயிர்கள், ஆங்காங்கே நிறைய கிளைகளை உடைய பெருமரங்கள்.  இவற்றை பார்க்கும் போது மனதினில் ஓடிய ஒவ்வையாரின் மூதுரை : 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சவை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன்  நல் மரம். 

கிளைகளை உடையனவாகவும், கிளையின் கொம்புகளை உடையனவாகவும் காட்டினுள்ளே நிற்கும் அந்த மரங்கள் நல்ல மரங்களாக ஆக மாட்டா!  கற்றோர் பலர் உள்ள  சபையின் நடுவே கற்றவர் ஒருவர் கொடுத்த ஓலையைப் படிக்க மாட்டாமல் நின்றவனும், பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே மரங்கள். கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையராவர்.

 


ஆசாமி சிரிப்பு சிந்தனையானின் இன்றைய பகிர்வு

 

With regards – S Sampathkumar

1.4.2024

1 comment: