Pages

Saturday, May 18, 2024

Aeroplane landing - thoughts of 1980s

வருஷங்கள் ஓடுகின்றன ! காலங்கள் மாறுகின்றன !  1975ல் ஆண்டி ராபர்ட்ஸின் வேக பந்து வீச்சை அற்புதமாக தடுத்து ஆடிய குண்டப்பா விஸ்வநாத்தின் ரசிகர்களுக்கு இன்றைய IPL T20 madness  பிடிக்காமல் போகலாம்.  நான் விதிவிலக்கு எனக்கு இரண்டுமே, ஏன் யார் கிரிக்கெட் ஆடினாலுமே பார்த்து ரசிக்க பிடிக்கின்றது.  

1980களின் திருவல்லிக்கேணி (கிட்டத்தட்ட தமிழகத்தின் ஏனைய பகுதிகளும்) இருந்த நிலைமையை இன்றைய இளைஞர்களால் புரிந்து கொள்வது கடினம்.  படிப்பு, சினிமா, விளையாட்டு, வேலை பற்றி, எதிர்கால கவலை நடுவே, தெருக்களில் தாவணி பெண்களை நோக்கி புன்னகைத்து, பலர் மனக்கோட்டை கட்டி சந்தோழித்து இருந்த காலம்.  அன்றைய நாட்களின் சின்ன சின்ன நிகழ்வுகள் கூட அதிசயத்யதையும் ஆனந்தத்தையும் அளித்தன. 

ஒருவனின் இளம் வயது என்பது லட்சியங்களும் கனவுகளும் நிரம்பி பெருகி வளரும் காலக்கட்டம். அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட்டு விட முடியும் என்கிற நம்பிக்கை நிறைந்திருக்கிற வயது. கூடவே சந்தேகமும் நிராசையும் இணைந்திருக்கும் பருவம். விஸ்வம் ஒரு பட்டதாரி இளைஞன். கொஞ்சம் அறிவு ஜீவி. தனக்கு பிடித்த மாதிரி இலக்கியம் வாசித்து கொண்டும், எழுதி கொண்டும், வருமானம் இன்றி காலம் கழிக்கிறான்.  

இந்த விஸ்வம் ஞாபகம் உள்ளதா ! - சுஜாதாவின் கணேஷ் போல இவர் உங்கள் ஆதர்ச நாயகனா !  தரையில் இறங்கும் விமானங்கள், இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூலாக வெளிவந்தது.  இந்த நாவல்   ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது என குட்டி செய்தி !!

 


இங்கே தரையில் அல்ல மரத்தில் இறங்கும் விமானம்.

ஞாபக அலைகள் - ஆசாமி சிரிப்பு சிந்தனையான் - மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார் .
18.5.2024 

No comments:

Post a Comment