Search This Blog

Tuesday, June 18, 2024

Crow spreading wings ! - காக்கைச் சிறகினிலே நந்தலாலா

A crow is a bird of the genus Corvus, or more broadly a synonym for all of Corvus.   

எம்பெருமான்,  ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் வசுதேவர் தேவகி தம்பதிகளுக்கு மதுரா சிறைச்சாலையில் பிறந்தவர்.  எட்டாவது பிள்ளையான கண்ணனை மாமன் கம்சனிடம் இருந்து காப்பாற்ற  இரவோடு இரவாக வசுதேவர் யமுனை வெள்ளத்தை தாண்டி கோகுலத்தில் தலைவனான நந்தன் யசோதை தம்பதிகளிடம் பத்திரமாக  வளர விட்டு விடுகிறார். அதனால் கண்ணனுக்கு நந்தகுமாரன் என்ற பெயர் உண்டு. வடமொழியில் குழந்தைகளை செல்லமாக லல்லா அல்லது லாலா என்று அழைப்பார்கள். நந்நனுடைய செல்லப்பிள்ளையான கண்ணனை நந்தலாலா என்றழைத்தனர். 

பாட்டி சுட்ட வடையும் - அதை சுட்ட (திருடிய) காகமும் கதை, தமிழில்  மிகப்பரவலாக வழங்கிவரும் செவிவழி நீதிக்கதை.  தலைமுறை தலைமுறையாக சிறுவர்களுக்கு இக்கதை சொல்லப்பட்டு வருகிறது.  இக்கதையின் பாத்திரங்கள் - ஒரு  பாட்டி, குழந்தைகள், சில விலங்குகள், பறவை காக்கா - பல்வேறு சிறு சிறு திரிபுகளுடன் இக்கதை எல்லா இடங்களிலும் பொதுவானதாகக் காணப்படுகிறது. 


 

காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

 

அற்புதமான இந்த பாரதியாரின் கவிதையை பல இசையமைப்பாளர்களும்,  மெட்டு போட்டு அதை பாடல் ஆக்கினார்கள்.   1981ஆம் ஆண்டு, ரகுவரன் நடிப்பில் வெளிவந்த ” ஏழாவது மனிதன்” என்ற திரைப்படத்தில்  - திரு எல். வைத்தியநாதன் இசையில், கேஜே  யேசுதாஸ் குரலில் வந்த பாடல் சிறப்பாக இருந்தது.
 
 
 
With regards – S. Sampathkumar
18.6.2024  

No comments:

Post a Comment