Search This Blog

Friday, August 23, 2024

Understanding an aircraft !!

How do you understand !  - just stand under – here is standing under [நிற்றல்]  an aeroplane !

 


அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல் என்பது முதன்மையானதொரு மரபு. நிற்றல் என்ற  பெயர்ச்சொல்:  நிற்கை, standing  என பொருள் தரும், Understanding  என்பது உணர்தல். 

நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த திருக்குறள் :  கற்ற வேண்டியவற்றைப் பழுதறக் கற்க வேண்டும். அதன்படியே நடக்கவும் வேண்டும்” எனும் கருத்துடைய  

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.’

 

ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க; அங்ஙனங் கற்றால் அக் கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.  அதாவது, ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. 'கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன,  பொதுக்கல்விக்கேற்ப அறநெறியிலொழுகுதலும் சிறப்புக்கல்விக்கேற்பச் செவ்வையாய்த் தொழில் செய்தலும் ஆம். இவ்விருவகை நடத்தையிலும் நிலைத்து நிற்க வேண்டுமென்றற்கு 'நிற்க' என்றார்.  

நமக்கோ நடுத்தெருவில் ஒன்றும் செய்யாமல் நிற்றல் பிடிக்கும் !  கற்கத் தக்கனவற்றைக் கற்போமாக! கற்றபடியே நிற்போமாக!  

ஆசாமி சிரிப்பு சிந்தனையாளன் இன்று வானத்தை சும்மா பார்த்து நின்றபோது உணர்ந்த அரும்பொருள் !! 

 
With regards – S  Sampathkumar
23.8.2024 

No comments:

Post a Comment