Today is 12th Sept
and today dawns with heavy heart remembering the great poet, Inspirational
freedom fighter, iconoclast Mahakavi Subramaniya Bharathiyar !! - have you heard of a village in Tirunelveli by name
Seevalaperi.
கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங்கற்கினும்; ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்;
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரை நினைவு கூறும் இந்நாளில், நீங்கள் இந்த
வரிகளை கேட்டதுண்டா ? அற்புத கவி, தனது காலத்துக்கு முன்பே வருவன குறித்து தீர
ஆலோசித்த தீர்க்கதரிசி மகா ஞானி பாரதியார் தனது சுய சரிதையில் அன்றைய ஆங்கிலப்
பள்ளிக் கல்வி முறை பற்றி மனம் நொந்து கூறிய வார்த்தைகள் இவை.
சுப்ரமணிய பாரதியார்
~ ஒரு உன்னத பிறவி. கவிதைகள்
வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல்
ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி - தன் காலத்துக்கு மிகவும்
பல்லாண்டுகள் பிறகு நடக்க வல்லவை பற்றி கூர் நோக்குடன் சிந்தித்தவர். நம்
கருத்துக்களை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒருநாள் குவளை கண்ணன் கேட்டார். அதற்கு
பாரதி, ‘ஏனெனில் நம் கருத்துக்கள் இன்னும் நானூறு ஆண்டுகள் கழித்து சொல்லப்பட
வேண்டியவை. இவர்களால் புரிந்துகொள்ள முடியாது’ என்றார். பாரதி மஹாகவி மட்டுமல்லன்
! ~ கவிதை அவர்க்கு சரஸ்வதிதேவியின் வரம். அவரது சிந்தனை, வார்த்தைகள், செயல்
எல்லாமே தேசபக்தி. விடுதலை உணர்வு ~ ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த பாரதத்தை உலுக்கி எழுப்பின அவர்தம் பாடல்கள்.
அவர்தம் எண்ணங்கள் காலத்தை கடந்தவை. உண்மையிலேயே அவர் தாம் வாழ்ந்த காலத்தினை
தாண்டி சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி.
On Dec 11, 1882 in Chithrabanu
varusham, Karthikai month 27th day – Moola Nakshathiram was born a boy
child. At his young age of 11, Subbaiah was given the title of
Bharathi. In 1897 June he got married to Chellammal – due to negligent
governance of British, cotton mills suffered huge losses, Subbaiah’s father had
to close down his mill and he passed away. Barathi had lost both his
parents and in 1897 he had to go to Varanasi (Kasi) where he learnt Sanskrit
and Hindi. He also became conversant in speaking Bhojpuri, Awadhi,
Brajbasha and more.
For most people, Sept. 11 draws remembrance to that ghastly terrorist
attack that shook the United States. Sept. 11, 2001, will always be
recognized as a day of tribulation in the United States. Some 3,000 people lost
their lives in multiple terrorist attacks, the largest one being the fall of
the World Trade Center’s twin towers in New York City. Thousands of first
responders and civilians risked their lives to save others.
It is 23 years since –
for some life has changed, for it stands frozen and there are those who are
deeply impacted by that ghastly act of terrorism. It is not simply the count of
dead or those maimed, the toll is actually more. Many forms of
carcinogens were left in the air and inhaled by thousands of people. General
illnesses caused from high levels of dust inhalation have attributed to chronic
coughs and asthma for bystanders and first responders. Most severely, multiple
forms of leukemia, melanoma and mesothelioma cancers have been linked to the
destruction at the World Trade Centre in 2001.
The day, Sept.
11, is remembered World over for various reasons ! - for us - we
mourn the great loss of the Nation on this day 103
years ago (actually a day
later). The man, the fighter, the poet Mahakavi Subrahmanya
Bharathiyar. He was a Genius, Extrovert, Patriot,
Poet, Thinker, man who dreamed beyond his time, an
eternal Optimist, man with die-hard spirit, motivator, man capable of uniting
great minds, natural leader – all rolled one. Most unfortunate thing was his
age – his life was too short - he lived for only 39 years.
His poetry stands out for
many facets of his love for our motherland. He berates his countrymen for many
social evils. He chastises them for a fearful and pusillanimous attitude
towards the rulers. He gave a clarion call for national unity, removal of
casteism and the removal of oppression of women. He calls for the British to
leave the motherland in forceful ways at one point saying "Even if Indians are divided, they are children of One Mother,
where is the need for foreigners to interfere?".
The stay at his aunt
house in Kasi changed his life : காசி பஞ்சகத்தில்,
‘காஸ்யாம் ஹி காஸதே காஸீ காஸீ ஸர்வப்ரகாஸிகா
ஸா காஸீ விதிதாயேன தேன ப்ராப்தா ஹி காஸிகா’
காசி என்றாலே எப்போதும்
பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மா !! உள்ளிருக்கும் காசியை வெளியிலிருக்கும்
காசியானது இந்த அஞ்ஞான மயமான மனதிற்கு காட்டிக் கொடுக்கிறது. புனித வாரணாசியை
ஞானத்தின் ஊற்று கொப்பளிக்கும் இடமாக ஆதிசங்கரர் உணர்ந்தார். காசி க்ஷேத்ரத்தையே
சரீரமாகக் கொண்டால், உபநிஷதம் கூறும் மகாவாக்கியப் பொருளை கூறியபடியே ஓடும் ஞானதாரையே
கங்கை என்கிறார் .. … … :
மஹாகவி காசிக்கு
வந்த சமயம் இனிதானதல்ல !! 1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி
காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை
குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே, அவர் அங்கே சென்றார்.
"இன்னது நீர்க்கங்கையாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''
இது கங்கைக்குத் தங்கக்
கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள். . காசி-கங்கை அவரின் உள்ளத்தில் உவகையையும்
தெய்வீகத்தையும் வளர்த்தது. ஹிந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார்.
கங்கையின் பிரவாகத்தை விழிவிரிய பார்த்துக் கொண்டிருப்பார். சாதுக்களையும், விதம்விதமான
மக்களையும் கவனித்துக் கொண்டே இருப்பார். பாரதியின் பாண்டியத்தை காசிப் பண்டிதர்கள்
அப்போதே வியந்தனர். தன்னுடைய 16 வயதிலிருந்து 21 வயதுவரை அவர் காசிவாசியாக இருந்தார். கொஞ்சகாலம் பள்ளியொன்றில் ஆசிரியர்
பணியிலும் இருந்தார். பண்டிதர்களிடையே பாரதியார் எப்போதுமே தீவிரமாக விவாதிப்பாராம்.
பாரதியார் தன் உடையிலும், தோற்றத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொண்டது காசியால்தான்.
கங்கையின் கம்பீரமே அவரின் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.
He lived the life of a
fearless journalist reaching great heights. He rose to become sub-editor
of “Swadesamitran” in Nov 1904. .. .. his prime of life was
spent running away from the British ensuring that the fire for freedom was
stoked with his powerful words. “India” the magazine saw the light
of the day in May, 1906. It declared as its motto the three slogans of the
French Revolution, Liberty, Equality and Fraternity. It blazed a new trail in
Tamil Journalism.
It has been propagated that
Barathi was killed by the elephant of Sri Parthasarathi swami thirukkovil – the
incident did occur and the frail Barathiyar was felled .. but that
happened in June 1921- Kuvalai Kannan saved him and Mandayam Srinivasachariyar
with few others took him to Royapettah hospital; Mahakavi survived. Later
in the months of July and August, Barathi attended to Sudesamithiran office
work and even toured Erode, speaking at Karungalpalayam – his famous speech .
மனிதனுக்கு
மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார். ஞானிகளுக்கு மரணம் என்பது உடைகளை
மாற்றுவது போல.
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-
The great poet Mahakavi Subramaniya Barathiyar
breathed his last in the night of 11.9.1921 which actually was 1.30 am
ie., early hours of 12.9.1921.
வெள்ளையர்
தம் அடக்குமுறை, எப்போதும் ஓட்டம், பசி, பிணி போன்றவற்றால் வாடிய மஹாகவிஞனை -
"கோவில் யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையை பரப்பியுள்ளனர்.
1882, டிசம்பர், 11ல் எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதி, 1921, செப்டம்பர் 11ல், சென்னையில் இறந்தார்
என்பது பன்னாள் வரலாறு. தமிழக, புதுச்சேரி அரசுகள், செப்டம்பர், 11ம் தேதியை, பாரதியின் நினைவு
நாளாக அனுசரித்து வந்துள்ளன. திருவல்லிக்கேணி இல்லத்தில் அவரது நினைவு நிகழ்வுகள்
செப்ட் 11ல் நடந்துள்ளன. ஆயினும் - அந்த கொடிய நாள் செப்ட் 12 - (அதிகாலை).
சென்னை மாநகராட்சி பதிவேட்டில், செப்டம்பர் 12ல், இறந்தார் என, பதிவாகி உள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும்
வகையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், பாரதி பாடல் ஆய்வுப் பதிப்பு நுாலிலும்,
1921, செப்டம்பர் 12, 01:30 மணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாகவியின் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா. காசியும் மஹாகவியும் பகுதி கண் முன்னே கங்கையையும் பாரதியாரையும் நிறுத்திற்று.
ReplyDelete