Search This Blog

Thursday, October 17, 2024

Appreciate rains !! ~ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

 

Praying and appreciating Rains !!!  ~  Silappathikaram

 


"மழை இல்லாமற் போனால்தான் மழை எவ்வளவு அவசியமானதென்று மக்களுக்கு புரிகின்றது' எனினும் மழை பெய்யும்போது பலர் தூற்றுகின்றனர். தெரிகிறது. வேத காலத்து ரிஷிகள் சூரியனை எப்படி தோத்திரம் செய்தார்களோ அப்படியே வருணனையும் பிரார்த்தனை செய்தார்கள். சிலப்பதிகாரம் காவியத்தில் சூரியனையும் சந்திரனையும் போற்றிவிட்டு, "மாமழை போற்றுதும்" மாமழை போற்றுதும்" என்று அழகாகப் சொல்லப்பட்டுள்ளது.

 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலியுலகிற்கு அவன்அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்.

 

யாம் பெரிய மழையைப் போற்றுவோம் ; பெரிய மழையைப் போற்றுவோம் ;  அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு,   அவன் அளி செய்யுமாறுபோல,  மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.!!

 

நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. வேலி - சூழ்தல். அளி - ஈகை.  மழை என்பது அருளின் குறியீடு; அது தெய்வம் சார்ந்தது. வஞ்சிக் காண்டம் தெய்வீகம் நிறைந்தது; ஆகவே மழை வஞ்சிக் காண்டத்துக்குக் குறியீடு.

 

S Sampathkumar
17.10.2024

No comments:

Post a Comment