Search This Blog

Friday, October 25, 2024

Brahminy kite (Haliastur indus) ~ Garuda !!

 

Guess the movie and song with the description in the following para : 

முன்பு ஒரு காலத்தில் பாடல்களில் கருத்துக்கள் செறிந்து இருந்தன.  கவிஞர் கண்ணதாசன் என்ற சிறந்த மனிதன் சினிமா பாட்டுக்கள் எழுதி வந்தார்.   1973ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த 'சூரியகாந்தி' திரைப்படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில், டி.எம். சௌந்தர்ராஜன் அவர்கள் பாடுவதாக அமைந்துள்ள பாடல் மிக சிறப்பானது.   ஜெயலலிதா, முத்துராமன், சாவித்ரி, சோ ராமஸ்வாமி, மௌலி, மனோரமா இவர்கள் நடித்த படம்.  காரைக்குடி ஈன்றெடுத்த காவியக் கவிஞனே திரையில் பாடுவதாக அமைந்திருக்கும்  பாடல் அது.  "தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் கணவனின் ஈகோ தான் கதைக்களம்.  

The Brahminy kite (Haliastur indus), also known as the red-backed sea-eagle in Australia, is a medium-sized bird of prey in the family Accipitridae, which also includes many other diurnal raptors, such as eagles, buzzards, and harriers. They are found in the Indian subcontinent, Southeast Asia, and Australia. Adults have a reddish-brown body plumage contrasting with their white head and breast which make them easy to distinguish from other birds of prey.  

கருடன் செம்மண் நிற இறக்கைகளையும்  உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாகவும்  உடைய செம்பருந்து (Brahminy Kite, Haliastur indus). கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது.  



ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாக- பெரிய திருவடி,  என  திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன்,   ருத்துமன், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, விஜயன், ஜெயகருடன்,  சுவணன்கிரி, கிருஷ்ண பருந்து, ஓடும்புள்,   போன்ற பல பெயர்கள் உண்டு. 

கருட பக்ஷியை வானத்தில் காண்பது சிறப்பானது.  கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது. கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று பாண்டவர்கள்  கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.  உலக மக்கள் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.

இதோ அந்த பாடலின் சில வரிகள்: 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டத,  கருடா சௌக்கியமா ??

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. 

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது   உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் - நிழலும் கூட மிதிக்கும்

 
Garuda pictured at Triplicane
 
With regards – S Sampathkumar
25.10.2024

No comments:

Post a Comment