Search This Blog

Wednesday, October 23, 2024

Measurements - Metric and .. : படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்

தமிழ் ஓர் சிறந்த மொழி.  படி என்ற பெயர்ச்சொல்லுக்கு படித்தல், கற்றல் செய்ய சொல்லும் அறிவுரையாக பொருள் கொள்ளுவோம்.  கீழே உள்ள திருக்குறளில், படி வேறு அர்த்தத்தில் வருகிறது.  நீங்கள் காணும் படத்தில்  உள்ளது ஒரு அலகு - இதிலும் படி உண்டு !! 



படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

செல்வம் பொருந்தியவன் வேந்தன்.  அத்தகைய நாட்டை ஆளும் தலைவருடைய உறவு,  தானே வந்து சேர்ந்தாலும் கூட, சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது. முயற்சி அதி முக்கியம் என தெளிவுற உரைக்கின்றார் நம் திருவள்ளுவர்.

In antiquity, systems of measurement were defined locally: the different units had independent definitions going by customs and usages – in a manner of the length of a king's thumb or the size of his foot, the length of stride, the length of arm, or maybe the weight of water in a keg of specific size, perhaps itself defined in hands and knuckles. Obviously there was need for standardization as geographical barriers were broken.

Measurement is the quantification of attributes of an object or event, which can be used to compare with other objects or events.  The scope and application of measurement are dependent on the context and discipline. In natural sciences and engineering, measurements do not apply to nominal properties of objects or events, which is consistent with the guidelines of the International vocabulary of metrology published by the International Bureau of Weights and Measures. However, in other fields such as statistics as well as the social and behavioural sciences, measurements can have multiple levels, which would include nominal, ordinal, interval and ratio scales.

The French Revolution gave rise to the metric system, that  has spread around the world, replacing most customary units of measure. In most systems, length (distance), mass, and time are base quantities.   The metric system has meter, centimeter, millimeter, and kilometer for length; kilograms, milligrams, centigrams, and gram for weight; liter, kiloliter, centiliter, and milliliter for capacity; hours, minutes, seconds for time.

அளவை என்ற பெயர்ச்சொல்லுக்கு : தானியங்களை அளவையிடும் படி; அலகுகளைக் கொண்டு அளவு (measure) எடுக்கும் முறை; தத்துவம் - அறிவைப் பெறுவதற்கான வழி.; நிறுத்தலளவை அல்லது எடுத்தலளவை (weight), எண்ணலளவை (count), நீட்டலளவை (distance,height) போன்ற அளக்கும் முறை, என பலவற்றை கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.   

The metric system is a decimal-based system of measurement. The current international standard for the metric system is the International System of Units (Système international d'unités or SI), in which all units can be expressed in terms of seven base units: the metre (m), kilogram (kg), second (s), ampere (A), kelvin (K), mole (mol), and candela (cd). These can be made into larger or smaller units with the use of metric prefixes. 

Britain officially converted to the metric system in 1965, but just like the commonwealth countries of Canada and Australia, there’s still a mix of measurements—both metric and imperial—in everyday usage throughout the UK.  India adopted metric system immediately after Independence.

முகத்தல் என்றால் : மொள்ளுதல்; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல்.  மாவடு போன்றவற்றை படி (கால் படி; அரைப்படி; 1 படி) எனவும்; வேப்பம் பூ போன்றவற்றை ஆழாக்கு என்ற அளவையிலும் விற்றார்கள் - நாம் வாங்கினோம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம்.  இன்னமும் பூ கட்டி விற்பவர்கள் - ஒரு முழம், இரண்டு முழம் என (முப்பது பைசா மூணு முழம் அந்த காலம் !!) முழம் அளவையாக விற்கிறார்கள் .. .. முழம் ஒரு மனித கையின் அளவு.  அளப்பவரின் கையை பொறுத்து இது மாறலாம்.

அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிலோகிராம், மீட்டர், கேண்டெலா, நொடி (கால அளவு), ஆம்பியர், கெல்வின், மோல் என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, பாரிஸில், Sèvres இலுள்ள, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின் தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.



நெல், அரிசி, பருப்பு, தனியா வகைகளை - படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.  படி என்ற  பெயர்ச்சொல் இங்கே  அளக்கும் கருவியை குறிக்கும்.   8 ஆழாக்கு = ஒரு படி. 'ஆழாக்கு' என்பது பயறு தானியங்கள் போன்றவற்றை அளக்க பயன்படுத்தி வந்த அளவை.  படியை விட சிறியது.  ஒரு ஆழாக்கு என்பது கிட்டத்தட்ட 200 கிராம்,அதாவது ஐந்து ஆழாக்கு ஒரு படி ஆகும், ஒரு படி என்பது கிட்டத்தட்ட ஒரு கிலோவாக இருக்கும்

 
Interesting !
 
With regards – S Sampathkumar
23.10.2024 

No comments:

Post a Comment