Search This Blog

Saturday, October 12, 2024

the lil Black Bird !! ~ திருவிளையாடல் புராணம்

When Yours Truly was employed – on one of my tours, stayed in a hotel in Hyderabad Begumpet area that had many trees.  An early morning walk was so enterprising !  could hear lot of chirping sounds.  Found this small bird hopping hither and thither and not posing for a photo ! – it looked much like a ‘miniature Crow’ – with a long curved beak !!

 


மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் எனும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றிச் சொன்னார் என்றும், அதை வியாசருக்குச் சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.  சிவபெருமானது திருவிளையாடல்களை பற்றி பரஞ்சோதி முனிவர்  எழுதிய நூல்- திருவிளையாடல் புராணம் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. 

தமிழ் சினிமா பார்க்கும் அனைவரும் பார்த்து, ரசித்து, கேட்டு, மறுபடி மறுபடி பார்த்த காட்சி - நாகேஷும், சிவாஜி கணேசனும் வரும் காட்சி.  நாகேஷ் தனியாக  குறுக்கும் மறுக்குமாக நடந்து ‘’அவன் வரமாட்டான் அவன் வரமாட்டான்” எனக்கு பரிசு கிடைக்காது என்று புலம்பியபடியே நடப்பதை உங்கள் மனதில் நினைத்து பார்த்து சிரியுங்கள் !! 

ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில்  1965ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் - "திருவிளையாடல்".  சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, நாகேஷ், கேபி சுந்தராம்பாள், மற்றும் நாகராஜன் (நக்கீரராக) நடித்திருந்தனர்.  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வாக்கு சிறப்பு. இத்திரைப்படம் திருவிளையாடல் புராணம் எனும் புகழ் பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. 

ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் அல்லது கருங்குருவிக்கு உபதேச திருவிளையாடல் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும்  திருவிளையாடல் புராணம் நூலிலுள்ள 47 வது படலமாகும்.  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. 

ராஜராஜனின் மகன் சுகுண பாண்டியன், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு பதவியேற்ற ஆட்சிக்காலத்தில் கருங்குருவி ஒன்று மதுரைக்கு அருகில் இருந்த ஒரு ஊரில் வசித்து வந்தது.  முற்பிறப்பில் புண்ணிய காரியங்கள் செய்திருந்தும், சிறிது பாவமும் செய்தமையால் ஒருவன் மறு பிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்தது. அப்போது சிலர் மதுரை பற்றியும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் எனவும் உரையாடினர். கருங்குருவி அங்கிருந்து மதுரைக்கு வந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது. இறைவனும் குருவியின் பக்திக்கு இணங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் கருங்குருவியின் இனத்து பெயரான எளியான் பெயரை ’வலியான்’ என மாற்றினார். இத்திருவிளையாடல் நிகழ்வுவை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருநாளில் ஆண்டு தோறும் நடத்திக் காட்டப்படுகிறது.

 



நிற்க !  படத்தில் உள்ளது கருங்குருவி அல்ல இது – Black Sunbird.  தேன்சிட்டு  !! தேன்சிட்டு அமெரிக்காவில் உள்ள ஓசனிச்சிட்டு (ஹம்மிங்க்பேர்ட்) போலத்தோன்றும்;  உருவத்தில் சிட்டுக்குருவியை விட சற்று பெரியது. 

 


The song and sound is a rapid, sweet cadence lasting 1.5-4 seconds in duration. It consists of single or a series of high-pitched sibilant notes; rapid fire double notes.  It hops from one branch to another, to another tree in seconds ! – easy to see with eyes,  hard to capture in a Camera.  The amethyst sunbird, also called the black sunbird (Chalcomitra amethystina), is a species of passerine bird in the family Nectariniidae.   

Though mostly found singly or in pairs, larger numbers may concentrate at favourite flowering trees, where they act aggressively towards other sunbird species. The complex song is a loud, sustained twittering.   In courtship a male will hop about a branch near a female, flutter its wings and make an attractive display.  Sunbirds and spiderhunters make up the family Nectariniidae of passerine birds. They are small, slender passerines from the Old World, usually with downward-curved bills.  

Here are some photos taken by me

 
With regards – S Sampathkumar
12.10.2024

  

No comments:

Post a Comment