Search This Blog

Wednesday, November 13, 2024

Green fields ~ Dusi Mamandur village

How often do you visit villages ? – or when did you visit a village last ! – and how long was your stay there, few minutes, hours, days  ?? 

கிராமங்கள் புகைப்படத்தில், சினிமாவிலும் பார்க்க மிக மிக ரம்மியமாக அழகாக இருக்கும்.  நேரில் நிஜத்தில் சில நாட்கள் அங்கே வாழ்வது வித்தியாசமாக இருக்கலாம். 

எங்கள் பள்ளி நாட்களில் MGR படங்கள் நின்று விட்டன.  வயதான சிவாஜி நடித்துக்கொண்டு இருந்தார்.  கமலும் ரஜினியும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர்.  பாரதிராஜா கிராம கதைகள் என சில காதல் கதைகள் சொன்னார். கூடவே மகேந்திரன், பாலு மஹேந்திரா என சிலர் கிராமங்களை அழகாக காட்டினார்.   கிராமத்து மனோபாவம் கொண்டரசிகர்கள் ஏக்கத்தில் தவித்த சமயத்தில்  டவுசருடன் ராமராஜன் அசலான கிராமத்தவனாக வந்து  மக்கள் நாயகன் அந்தஸ்தைபெற்றார். கங்கை அமரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன.  நம்ம ஊரு  நல்ல ஊரு எங்க ஊரு பாட்டுக்காரன், , செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன்,  போன்ற படங்களின் தொடர் வெற்றி அவரை திரையுலகில்  உச்சத்திற்கு கொண்டு சென்றது.  

சுஜாதாவின் பற்பல அற்புத கதைகளில், சற்று அதிகம் அறியப்படாதது !!  "சின்னக்குயிலி",  தன் அப்பாவின் உயில் படி அவர் பிறந்து வளர்ந்த கிராமமான சின்னகுயிலிக்கு சில நல்ல காரியங்களை செய்ய வருகிறார் சிங்கப்பூரில் செட்டிலான மாணிக்கம். கிராமக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராமத்தினருக்கு இலவச மருத்துவமனை என்ற திட்டத்தோடு வரும் அவருக்கு சில குறுக்கீடுகள், அதை தாண்டி அவர் கட்டிய பள்ளியினால் ஏற்படும் நெருக்கடிகள், இதற்க்கு நடுவில் அந்த கிராமத்திலிருக்கும் சிறுவயது பெண்ணான, படிக்கும் ஆர்வமுடைய தேவநாயகியை கட்டாயப்படுத்தி அவளது தந்தை திருமணம் செய்து கொடுத்ததை எதிர்த்து அவளை காப்பாற்றப் போராடுவது என்று .. ..  ஒரு நல்ல சமுதாயத்திற்கு முன்னேற்றத் தேவையான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல விஷயங்கள்  பின்னாளில் சங்கரின் பிரம்மாண்டமான ரஜினிகாந்த் படம்  'சிவாஜியில்' பார்த்து இருப்பீர்கள்.  . கிராம தத்தெடுப்பு என்பதை 'பிரின்ஸ்' மகேஷ் பாபு போன்றவர்கள் செய்வதை பார்த்து இருப்பீர்கள்.  இவற்றிற்கு பல வருஷங்கள் முன்பே வருடங்களுக்கு முன்பே 'இந்த சின்னக்குயிலி' நாவலின் மூலமாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. 

 


A picture of the agricultural fields taken at my native village – Dusi Mamandur,  Vembakkam block, Thiruvannamalai Dist, Pincode 632317.

 
Regards – S Sampathkumar
13.11.2024 

No comments:

Post a Comment