Pages

Thursday, December 12, 2024

"Barathi - yaar" celebrating Mahakavi Subrahmanya Bharathiyar

11th   Dec  is a day to remember ~  2024 marks the  143rd  birth   day of the greatest poet, a great son of India – Mahakavi Subrahmanya Barathiyar.  The man who was to become an iconoclastic freedom fighter was born in a small village called Ettayapuram on Dec 11, 1882. His  parents  Chinnasami Subramanya Iyer and Lakhsmiammaal named him Subbaiah.  From a very young age he learnt music and at 11th , he learnt songs; he was conferred the title of "Bharathi" (one blessed by Saraswati, the goddess of learning.

 


பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!  பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்  பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!

பூமியிற் கண்டோமே.

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

 

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!

குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் கொடி வளராதோ?-நன்னெஞ்சே! 

 

திருவல்லிக்கேணியின் ஒரு சிறப்பு - துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது இறுதி காலத்தில் மாமனிதன் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த மண். பாரதி அற்புத கவி, சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர், செல்லுமிடமெல்லாம் சுதந்திர தீயை மக்களின் மனதில் வளர்த்தவர். தன்னுடைய தாய்நாட்டை நினைத்துப் பெருமிதம் கொண்டு தேசத்தின்  எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வை பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். 

சின்னஸ்வாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 12, 1921) - ஒரு மாபெரும் சகாப்தம். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் பல ஒருங்கிணைந்தவர். பாரதியார் என்றும் மகாகவி என்றும் பெருமை பெற்றவர்.  சுதந்திர போராட்ட தணலை தன் வாழ்நாள் முழுதும் கொழுந்து விட்டு எரிய விட்ட பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.   எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.  இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் புகழ்ந்தார்.  இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களில் வேலை பார்த்து, பல கட்டுரைகளையும் எழுதினர். 



TA வெங்கடேஸ்வரன், இசைக்கவி ரமணன் என பெயர் பெற்றுள்ளார்.  பத்திரிகை துறையில் பல வருஷங்கள் பணியாற்றிய பின் இவர் நாடககலையில் பிரசித்தி.  பாரதியின் புகழ் பரப்ப 'பாரதி-யார்?" எனும் தலைப்பில் அற்புத மேடை நாடகத்தை, சுமார் 60 முறை, தமிழகத்திலும், இந்தியாவின் பிற ஊர்களிலும், மஸ்கட் (ஓமான்), அமெரிக்க நகரங்களிலும், இந்த நாடகம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  நேற்று பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த இல்லத்தில் இந்த நாடகத்தை சிறப்புற நடத்தினார்.  அதிக மேக்கப், விளக்குகள், ஒலி போன்றவை இல்லாமல், குறைவான நடிகர்களோடு மிக சிறப்பாக நடந்த இந்த நாடகம், மழையிலும் அமர்ந்து இருந்து பார்த்த பாரதி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

நாம் பாரதியாரின்  பற்பல  பாடல்களை, பல சமயம் கேட்டுள்ளோம். சில சினிமாவிலும் பிரபலமாக உள்ளன.  இந்த பாடல் அதிகமாக கேட்டு இருக்க மாட்டோம்.   ஒருவர் நமக்கு தீங்கு செய்துவிட்டால், மனம் குமுறுவது இயற்கையே! உடனே விட்டேனா பார் என்று பதிலுக்கு என்ன செய்யலாம் என மனம் கறுவும்.  மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - 'பகைவனுக்கு அருள்வாய்' என ஒரு பாடல்தந்துள்ளார். தந்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதியாரை கைது செய்ய ஆங்கில ஆட்சி வாரண்ட் பிறப்பித்திருந்தது. பாரதியார் பாண்டிச்சேரியில் பாதுகாப்பாக இருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர்       "உம் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனி, நீர் சுதந்திரமாக இருக்கலாம். நான் சென்னைக்குப் போகிறேன். நீரும் என்னுடன் வரலாம்,'' என்று அழைத்து சென்று போலீசில் சிக்க வைக்க முயன்றார்.

 




பாரதியின் நண்பரான வக்கீல் ஒருவர் அதை தடுத்து, பாரதியை காப்பாற்றினார்.  பல வருஷங்கள் ஆங்கிலேயரின் சிறையில் பல கொடுமைகள் அனுபவித்து, அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் மட்டுமே சிறுவயதில் மரணித்த பாரதி தந்த சிறப்பு பாடல் இங்கே :  https://youtu.be/WODRRCVYzXc

 


 

Prime Minister, Shri Narendra Modiji  released the compendium of complete works of great Tamil poet and freedom fighter Subramania Bharati at 7, Lok Kalyan Marg, New Delhi. Paying his tributes to the great Tamil Poet Subramania Bharati on his birth anniversary, Shri Modi ji  said today was a great opportunity for India’s culture and literature, memories of India’s freedom struggle and for the pride of Tamil Nadu. He added that the grand culmination of the publication of the works of Mahakavi Subrahmania Bharati was done today. 

Lauding Shri Bharathiyar as a man with a foresight, the Prime Minister remarked that even in times when the society was embroiled in other difficulties, Bharathiar was a staunch supporter of youth and women empowerment and also had immense faith in science and innovation. He added that Bharatiyar had envisioned a communication which would reduce distance and connect the entire country. Reciting lines of Subramania Bharati, ‘”Kashi Nagar, Pulavar Pesum, Urai Taan, Kanchiyail, Ketpadarkor, Karuvi Cheyyvom’; meaning there should be a device through which one can listen to what the saints of Banaras are saying while sitting in Kanchi. The Prime Minister emphasized that Digital India was turning these dreams into reality by connecting India from south to north and east to west. He added that apps like Bhashini had also eliminated all the language related problems. Shri Modi remarked that there was a sense of respect and pride towards every language of India with a good intention to preserve every language of India, which leads to a way in which service is done for every language. 

Vanavil Panpattu maiyam has been organizing Birth celebrations of Mahakavi over the years and this year it was a 4 day long program. 

 
பாரதி வாழ்ந்த மண்ணில் வாழ்வதை பெருமையாக கொள்ளும் பாரதி சிந்தனையாளன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
11.12.2024 

No comments:

Post a Comment