மறைந்திருந்து பார்க்கும் மர்மம்
என்ன....
அரசமர பச்சை இலைகளின் இடையே கிளி
'இலைமறை காய் போல' - என்பது ஓர் உவமைத் தொடர். இலைகளினூடே ஒளிந்து மறைந்து சிறிய இடைவெளியில் புலப்படும் காய்கள் போல, கருத்துகளை நேரடியாகக் குறிப்பிடாமல்/ வெளிப்படுத்தாமல் உவமையாகவோ, சிலேடையாகவோ திறம்பட மறைத்துக் கூறுதல்.
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' என்ற பெயரில் 2018 ம் ஆண்டில் ஓர் திரைப்படம் வெளிவந்ததாக அறிகிறேன். ஓடியதாக தெரியவில்லை. இந்த வரிகள் - தமிழ் கூறும் சினிமா ரசிக்கும் நல்லுலகத்தில் ரொம்ப பிரபலம்.
நாட்டிய மயூரி மோகனாம்பாள் நடனத்தை கோவில் தூண் மறைவில் இருந்து நாதஸ்வர வித்வான் சண்முகம் பார்த்து இரசிக்க, மோகனா அவரை 'சண்முகா' என பாடலுக்குள்ளேயே மறைமுகமாக அழைத்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!?' என ஜாடைமாடையாகவும் கேலியாகவும் வினவுவதாக அமைந்த பாடல் - கே வி மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் வரிகளில், பி. சுசீலா குரலில் என்றென்றும் கவர்வதாக அமைந்துள்ளது.
1968 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் - திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எம். என். நம்பியார், கே. பாலாஜி, டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ், சி. கே. சரஸ்வதி, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். தில்லானா மோகனாம்பாள் "கலைமணி" என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல். தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் 1957-58 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. நாவலுக்கான விளக்கப்படங்களை ஓவியக் கலைஞர் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் கோபுலு வரைந்து இருந்தார்..
மறைந்திருந்து பார்க்கும் மர்மம்
என்ன....
ஸ்வாமி மறைந்திருந்து, பார்க்கும்
மர்மம்என்ன
அழகர் மலை அழகா ! இந்த சிலை அழகா
என்று .. ..
அன்புடன் ஸ்ரீனிவாசன்
சம்பத்குமார்
29.1.2025
No comments:
Post a Comment