விக்ரம்
நடித்த, டைரக்டர் ஷங்கர் இயக்கிய அந்நியன் படம் வெளியான பிறகு கருட புராணம், கும்பிபாகம்,
கிருமி போஜனம் போன்ற வார்த்தைகள் அனைவருக்கும்
தெரிந்தவை ஆகிவிட்டன. . கருட புராணத்தை தேடி தேடி படித்தவர்களும் உண்டு. `மனிதர்கள் குறைந்தபட்ச நல்லொழுக்கத்தையேனும் பின்பற்றி
வாழ வேண்டும்’ என்ற உயரிய நோக்கத்திலேயே ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும்
விளைவாக பாவ, புண்ணியங்கள் இருக்கின்றன என்று போதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில்,
இந்த உலகிலும், இறந்த பின்னரும் அவர்களின் ஆன்மாவுக்குத் தண்டனையோ, வெகுமதியோ உண்டு.
அதற்காகவே சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுள்ளன எனும் கருத்து
The Brahminy kite (Haliastur indus), also known as the red-backed sea-eagle in
Australia, is a medium-sized bird of prey in the family Accipitridae, which
also includes many other diurnal raptors, such as eagles, buzzards, and
harriers. They are found in the Indian subcontinent, Southeast Asia, and
Australia. Adults have a reddish-brown body plumage contrasting with their
white head and breast which make them easy to distinguish from other birds of
prey.
In 1760, French zoologist
Mathurin Jacques Brisson described and illustrated the Brahminy kite in the
first volume of his Oiseaux based on a specimen collected in Pondicherry,
India. He used the French name L'aigle de Pondichery. In 1783
the Dutch naturalist Pieter Boddaert coined the binomial name Falco indus in
his catalogue of the Planches Enluminées. The brahminy kite is now placed with
the whistling kite in the genus Haliastur.
Bald eagle is somewhat similar in looks but would be much bigger in frame and are found in North America, not here. The bald eagle (Haliaeetus leucocephalus) is found near large bodies of open water with an abundant food supply and old-growth trees for nesting.
கருடன் செம்மண் நிற இறக்கைகளையும் உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாகவும் உடைய செம்பருந்து (Brahminy Kite, Haliastur indus). கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீமன் நாராயணனின்
பெருமைக்குரிய வாகனமாக- பெரிய திருவடி, என திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு
கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன்,
ருத்துமன், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், மோதகாமோதர், மங்களாலயர்,
சோமகாரீ, விஜயன், ஜெயகருடன், சுவணன்கிரி, கிருஷ்ண பருந்து, ஓடும்புள்,
போன்ற பல பெயர்கள் உண்டு.
கருட பக்ஷியை வானத்தில்
காண்பது சிறப்பானது. கருட தரிசனம் சிறந்த
சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது. கருடன்
பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி
பெறலாமென்று பாண்டவர்கள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர்
என்று மகாபாரதம் கூறுகின்றது. உலக மக்கள் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய
பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட
புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர். கும்பிபாகம் - தரமற்ற உணவு, உணவிற்காக , வாயில்லா உயிர்களை வதைத்தும்
கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதற்கான தண்டனை - எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு,
எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
பொய்ச் சாட்சி சொல்லி நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கும் மனிதர்களுக்கு
உண்டான நரகம் `அவீசி.’ இங்கு துர்நாற்றம் கொண்ட நீரில் ஆன்மாக்கள் அழுத்தப்பட்டுத்
துன்புறுத்தப்படும். சாதாரண மக்களைக், பக்தர்களை
- துன்புறுத்தும், கொன்று குவிக்கும், அப்பாவிகளின்
உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் அநியாயக்காரர்களுக்கு `சாரமேயாதனம்’ என்ற நரகம் நிச்சயம்.
இங்குள்ள கொடிய மிருகங்கள் ஆன்மாக்களை வாட்டி வதைக்கும்.
பகவான் ஸ்ரீமன் நாராயணணின் வாகனமாக இருப்பவர் கருடன். மகாவிஷ்ணு சொல்லச் சொல்ல,
அதை கருடன் கேட்ட புராணம் - கருட புராணம் என்று அழைக்கப்படுகிறது. பிறப்பு இறப்புகள்,
மறுபிறவி, பாவ புண்ணியங்கள், சடங்குகள் என மனித வாழ்க்கைக்கு பயனுள்ள பல தகவல்கள் கருட
புராணத்தில் உள்ளன. குறிப்பாக, மனிதர்கள் தர்மம்
செய்வதற்கான பாதை மற்றும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை பற்றிய வழிகாட்டுதலை
கருட புராணம் வழங்கி உள்ளது.
29.3.2025
No comments:
Post a Comment