மின்னல்
ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ !! ~ மாஞ்சோலைக் கிளிதானோ !!
எவ்வளவு பிரயாணங்கள் செய்தாலும் அலுக்காதது இரயில் பயணம் .. .. .. உங்கள் மனதில் ஏதாவது இரயில் பயணம் உடனடியாக வருடுகிறதா ? 40 வருஷங்கள் கடந்து போனாலும், இரயிலை பார்த்தால் முணுமுணுக்கும் பாடல் இளயராஜா இசையில் - 'கிழக்கே போகும் ரயில்'. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய இரண்டாவது திரைப்படம் "கிழக்கே போகும் ரயில்". இத்திரைப்படத்தில் சுதாகர், எம்.ஆர். ராதிகா, விஜயன், காந்திமதி, ஜனகராஜ், கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். வணிக ரீதியாக வெற்றியடைந்த இப்படம், திரையரங்குகளில் ஒரு வருடம் வரை ஓடியது.
அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. பல தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. இவ்வாறு தூது அனுப்பும் உத்தி நற்றிணை போன்ற சங்கப் பாடல்களிலும், பின்னர் வந்த இலக்கியங்களிலும் கூடக் காணப்பட்டவை.
கிராமத்தில் வந்து நிற்கும் இரயிலில் இருந்து இறங்குகிறார் பாஞ்சாலி. அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அக்கா கருத்தம்மாவே கதியென்று இந்தக் கிராமத்துக்கு வருகிறாள். அங்கே பாட்டுக்கார பரஞ்சோதியைப் பார்க்கிறாள். பாஞ்சாலியை அவளின் அக்கா புருஷன் பார்க்கிறான். அவள் மீது ஆசை கொள்கிறான். பாட்டே கதியென்று கிடக்கும் பரஞ்சோதிக்கு வேலையில் நாட்டமில்லை. அப்படியே வேலை செய்தாலும் கவிதையிலும் கற்பனையிலுமாக மூழ்கிவிடுகிறான். சோளக்காட்டுக் காவலுக்குப் போனவன், பாட்டுப்பாடி, சோளத்தையெல்லாம் திருடக் கொடுக்கிறான்.
கிராமியச் சூழலில் பெருமளவில் வெளிப்புறப் படப்பிடிப்பாகவே தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ராதிகா அறிமுகமானார். இசைஞானி இளையராஜா இசையில் முத்துராமலிங்கம் வரிகளில், ஜெயச்சந்திரன் குரலில், சலங்கை ஒலி பாடல் முழுவதும் கிளுகிளுக்க புல்லாங்குழலும் வயலின்களும் ராசாவின் கற்பனை வளத்தோடு ஆட்சி செய்யும் பாடல். கர்நாடக இசையில் அமைந்த ‘மாஞ்சோலைக் கிளிதானோ’பாடல். ஜெயசந்திரனுக்குப் பெரும் புகழை பெற்றுத் தந்தது. 1978-ல் தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல் இது.
மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூதானோ நடை தேர்தானோ...
சலங்கைகள் தரும்இசை தேன்தானோ....
Not Barathiraja’s mancholai kili – but the parrots that come
to my terrace
1.4.2025
No comments:
Post a Comment